Headlines

இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை மீண்டும் நடைமுறைக்கு வந்தது!

வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 01, 2015) முதல் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குகின்ற நடைமுறையை இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தது. ஆரம்பத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு நிரந்தர வதிவிட உரிமையும், அதன் பின்னர் இரட்டைக் குடியுரிமையும் வழங்கப்பட்டுவந்தது. ஆனால், சொந்த நாட்டில் வந்து நிரந்தரமாக வசிப்பதற்கும், பணத்தை முதலீடு செய்வதற்கும் பிள்ளைகளை அரச…

Read More

மஹிந்த ராஜபக்ஷ தான் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியவில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது, “மிகவும் வேகமாகவும் காரசாரமாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேடைகளில் பேசுகின்றார். வானொலியில் அதனை நான் கேட்டேன். மிகவும் கோபத்துடன் பேசுகின்றார். மக்களின் மனங்களைப் புரிந்துகொள்ளுமாறு அவரிடம் நான் கூறுகின்றேன்….

Read More

கம்பஹா மாநகரசபை பிரதிமேயர் மைத்திரிக்கு ஆதரவு

கம்பஹா மாநகரசபை பிரதிமேயர் அஜித் பஸ்நாயக்க, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்  மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

Read More

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு ; கொலையா? எனச் சந்தேகம்

வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது மகாரம்பைக்குளத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான டெனி (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கனகராயன்குளத்தில் நீண்டகாலமாக இவர் தங்கியிருந்து மேசன் வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் தங்கிநின்று வேலை செய்வது வரும் இவரைக் சந்திப்பதற்காக அயல் வீட்டார் ஒருவர் சென்றவேளை இவர் சடலமாக காணப்பட்டார். இதனையடுத்து உறவினர்கள் கனகராயன்குளம் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விசாரணைகள்…

Read More

தென்கொரியாவுடன் பேசத் தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் அறிவிப்பு!

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த தேவைப் பட்டால் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யவும் தான் தயாராக இருப்பதாக வியாழக்கிழமை நிகழ்த்திய புது வருட சிறப்புரையில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சியோல் நிர்வாகம் இது வடகொரியாவுடனான உறவினை சுமுகமாக்குவதில் முக்கிய படிக்கட்டு என்றும் அறிவித்துள்ளது. சமீபத்தில் வடகொரிய அரசு மீது சர்வதேசம் முக்கிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள முன் வைத்திருந்ததுடன் ‘தி இன்டர்வியூ’ என்ற சர்ச்சைக்குரிய திரைப்பட விவகாரத்தில்…

Read More

வெற்றிலை போட்டால் உடம்புக்கு கேடு. வெற்றிலைக்கு போட்டால் நாட்டுக்கு கேடு: மனோ கணேசன்

வெற்றிலை போட்டால் உடம்புக்கு கேடு. அதுபோல, வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்குப் போட்டால் நாட்டுக்கே கேடு என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கிராமங்களில் வாழ்பவர்கள் தங்களுடன் இருப்பதாகவும், நகரங்களிலேயே எதிரணிக்கு செல்வாக்கு இருப்பதாகவும் மஹிந்த அரசாங்கம் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளது. இது அப்பட்டமான…

Read More

கடந்த காலங்களில் எதிர்க்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் மைத்திரிக்கு ஆதரவு

 பொலநறுவை பிரதேச சபை  மற்றும் நகர சபை  உறுப்பினர்கள் 21 பேர் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுடன் இணைந்துள்ளனர். முதலமைச்சா் தயாசிறியுடன் கடந்த காலங்களில் ஐ.தே.கட்சியில் இருந்து சென்ற  பிரதேச நகர சபை உறுப்பினா்கள் 21 பேர் எதிர்க்கட்சி வேட்பாளா் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளா் மாநாட்டில் கலந்து கொண்டனா்.

Read More

ரணிலை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்  அலுவலகத்திலே இன்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

ஆளும் அரசு தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது; சட்டத்தரணிகள் சங்கம்

தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் யுத்தவெற்றியை சிந்திக்கும் படங்கள்  காண்பிக்கப்படுவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். யுத்தவெற்றியை சிந்திக்கும் படங்கள் கொழும்பின் பல பகுதிகளில் அதிநவீன திரைகளில் காண்பிக்கப்பட்டுகிறது. இந்த நடவடிக்கையினை ஜனாதிபதி மகிந்த ராஜக்‌சவின் பரப்புரை பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன டிஜிட்டல் திரைகளை இந்த படங்களை காண்பிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். அந்த விசேட டிஜிட்டல் திரை ஒவ்வொன்றும் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியானவை….

Read More

மஹிந்த அரசிலிருந்து பிரதியமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்கவும் விலகினார்: மைத்திரிக்கு ஆதரவு!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து உயர்கல்விப் பிரதியமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்கவும் விலகி, பொது எதிரணியில் இணைந்து கொண்டுள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மேலும் வலுப்படுத்தி 3வது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் எனும் திருத்தத்தை முன்மொழிந்த 18வது அரசியல் திருத்தத்திற்கு தான் ஆதரவளித்தமை தொடர்பில் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொது எதிரணியில் இணைந்து கொண்டுள்ளதன் மூலம்,…

Read More