வெற்றிபெற துடிக்கும் ஆளும்கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான வழிவகைகளை அறியாமல் ஆளுங்கட்சி அல்லாடிக் கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆளுங்கட்சியை விட முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, எதிர்க்கட்சியை திணறடிக்க நினைத்த அரசாங்கம் தான் வெட்டிய குழிக்குள் வீழ்ந்து, வெளியேற வழியறியாது தவிக்கின்றது. காட்டாற்று வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவனுக்கு வைக்கோலும் பெரும் மீட்புக் கருவியாக தென்படுவதைப் போன்று, அரசாங்கத்துக்கும் சிறிய…
