Headlines

பதுளை கொஸ்லாந்தையில் இன்றும் இரண்டு சடலங்கள் மீட்பு

பதுளை கொஸ்லாந்தை – மீறியபெத்தை தோட்ட மண்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இன்றும் இரண்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது அதன்படி மண்ணுக்குள் புதையுண்ட 7 பேரின் சடலம் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சீரற்ற காலநிலையால் மீட்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. எனினும் மழையுடன் கூடிய காலநிலையால் மீட்பு பணிகள் தாமதமடைந்துள்ளன. இதேவேளை மீறியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரான் அரசாங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது. மண்சரிவில் உயிரிழந்த, காணால் போனவர்களின்…

Read More

மீரியாபெத்தை கிராமம் அபாய பிரதேசமாக பிரகடனம்

மண்சரிவுக்கு உள்ளான பதுளை, கொஸ்லந்த, மீரியாபெத்த கிராமம், அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் ஐந்தாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் போது, சுமார் 25 முதல் 30 அடி ஆழத்திலிருந்து இந்த சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களில் 6 சடலங்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், மீரியாபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை தோன்றுவதாகவும் அச்சடலங்களை…

Read More

அரசாங்கத்திலிருந்து விலக தயாராகும் ஜாதிக ஹெல உறுமய

அரசாங்கத்திலிருந்து விலக ஜாதிக ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜாதிக ஹெல உறுமயவினால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு வழங்கப்படும் பதிலைப் பொறுத்தே, 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் போது ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். தமது கட்சி முன்வைத்த யோசனைகளுக்கு உரிய பதில் கிடைக்காத பட்சத்திலேயே வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம்…

Read More

யாரும் எ திர்பார்க்காத முடிவை எடுப்போம்- முஸ்லிம் காங்கிரஸ்

தேசிய தேர்தலில் யாரும் எதிர்பார்த்திராத முக்கியமான நகர்வு ஒன்றை கட்சி மேற்கொள்ளவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட பதவி அரசியல் மூலம் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு, உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் பதவி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெளியே வர கட்சி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேசிய தேர்தலில் யாரும் எதிர்பார்த்திராத…

Read More

ஓட்டமாவடி பிரதே சபை உறுப்பினர்கள் சபை அமர்வினை பகிஸ்கரிப்பதற்கான காரணம் என்ன?

அஹமட் இர்ஸாட் சில நாட்களுக்கு முன்பாக ஓட்டமாவடி பிரதேச சபையில் உள்ள ஆறு உறுப்பினர்களால் சபையின் தவிசாளர் KPS. ஹமீட் அவர்களுக்கு எதிராக பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளருக்கு எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்ட மகஜர் ஒன்று இணைய தளங்களிலும், முகநூல்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன் உண்மை நிலையினை அறிந்து கொள்வதற்காக குறிப்பிட்ட தவிசாளர் மீது அதிர்ப்தி அடைந்துள்ள பிரதேச சபை உறுப்பினர்களை கூட்டாக சந்தித்து இணையதள வாசகர்களுக்காக செய்தியினை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு நேற்று முன்தினம் (01) கிடைத்தது. அதனை…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஒஸ்ரியா பயணம்

எ.எச்.எம்.பூமுதீன் கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சரும் அ.இ.ம.கா. தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன் இன்று (03/11/2014) அதிகாலை ஒஸ்ரியா பயணமானார். ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு  செய்துள்ள கைத்தொழில் அபிவிருத்தி மாநாடொன்றில் கலந்துகொள்ளும் பொருட்டே அமைச்சர் ஒஸ்ரியா பயணமானார். ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகத்தின் அழைப்பை ஏற்று சென்றிருக்கும் அமைச்சர், நாளை (04/11/2014) இடம்பெறும் குறித்த மாநாட்டில் இலங்கையின் கைத்தொழில் துறையின் தற்கால செயற்பாடுகள், கைத்தொழில் துறையில் இலங்கை  அடைந்துவரும் முன்னேற்றங்கள்,…

Read More

அடுத்தவருடம் இலவச வாட்ஸ்அப் CALL – இஸ்ரேலின் Viber க்கு பாதிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்அப் நிறுவனம் தனது இலவச வாய்ஸ் கால் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை 2015ல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய அம்சங்களை கொண்ட வாட்ஸ்அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளதால் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. இத்தகைய பிரபலமான வாட்ஸ்அப் 600 மில்லியன்…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபையமர்வு காரணமின்றி பகிஷ்கரிக்கப்பட்டது – தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட்

எம்.ரீ.எம்.பாரிஸ் சபை உறுப்பினர்களினால் பிராத்திய உள்ளுராட்சி ஆணையாளருக்கு அனுப்ப பட்டுள்ள கடிதப்பிரதி இத்துடன் அனுப்பபட்டுள்ளது கடந்த ஓக்டோபர் 30.2014ந் திகதி மு.ப. 10.00 மணியளவில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 43வது பொதுச் சபைக் கூட்டம் நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் ஏற்பாடாகியிருந்த நிலையில் பிரதேச சபையின் உறுப்பினர்களின் வருகை குறைவாக காணப்பட்டது. பிரதி தவிசாளர் ஏ.எம். நௌபர் அவர்களும்,உறுப்பினர் ஐ.ரீ. அமீஸ்டீன் அவர்களுமே வருகை தந்திருந்தனர் ஏனைய உறுப்பினர்கள் வருகை தராமையால்; பொதுச் சபைக் கூட்டம் அடுத்த…

Read More

சவால்களை முறியடித்து மேலும் வன்னியை அபிவிருத்திக்கு இட்டுச்செல்வேன் – அமைச்சர் ரிசாத்

ஏ.எச்.எம்.பூமுதீன் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் நிம்மதியான சந்தோசமான வாழ்வுக்காகவும் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதீயுதீன், இச்சவால்களை முறியடித்து முன்னேற அனைவரையும் ஒன்றுபடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் இலவச சாரதி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 220 தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வில் , பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு…

Read More

அலிகார் அஹதியா பாடசாலையின் 11ம் ஆண்டு நிறைவு விழா – பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத்

ஏ.எச்.எம்.பூமுதீன் அலிகார் அஹதியா பாடசாலையின் 11ம் ஆண்டு நிறைவு விழா இன்று 02 புத்தளம் ஹதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் வனிக அமைச்சர் ரிசாத் பதியுதீன்  பாடசாலை மணவர்ககு பரிசில்களை வழங்குவதையும் உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.

Read More

புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நடாத்திய 2014 பாலர் விளையாட்டு விழா(படங்கள்)

பழுலுல்லாஹ் பர்ஹான் சர்வதேச சிறுலர் தினத்தை முன்னிட்டு புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நடாத்திய 2014 பாலர் விளையாட்டு விழா 31-10-2014 நேற்றுவெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை மற்றும் புதிய காத்தான்குடி அபிவிருத்தி மத்திய குழு ஆகியவற்றின் தலைவரும்,நகர சபை உறுப்பினருமான எம்.எச்.எம்.பாக்கீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்;டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்;புல்லாஹ் கலந்து கொண்டார்….

Read More

பள்ளிவாசல் சுவர் விழுந்து ஒருவர் வபாத், 3 பேர் காயம்

திருகோணமலை கணேஷ் ஒழுங்கையிலுள்ள பள்ளிவாயலின் பழைய கட்டடத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சுவர் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக உப்பு வெளி பொலிஸார் தெரவித்தனர். இன்று காலை(1) இடம்பெற்ற இச் சம்பவத்தில், நவாஸ்- சாஹிபு (23 வயது) என்னும் இளைஞரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிவாயலில் புதிய கட்டட மொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டடத்தை அகற்றும் பணி இடம்பெற்று வருகிறது. இதன் போதே…

Read More