Headlines

கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக பலி…!!

ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை கிணற்றில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. பாலாவி வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இராசசேகரன் கோபினா பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் கிணற்றடியில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்த போது, குழந்தை தாய்க்கு முன்பாக நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் குழந்தையை காணவில்லை என தாயார் அயல் வீடு முழுவதிலும் தேடிய போது குழந்தையை காணவில்லை. பின்னர் கிணற்றிற்குள் பார்த்த போது, குழந்தை கிணற்றில் சடலமாக மிதந்துள்ளது. குழந்தை கிணற்றிற்குள் விழுந்து உயிரிழந்தமை…

Read More

இலங்கையின் மிகச்சிறந்த கட்டிடக் கலைஞராக யாழ். வாலிபர் தெரிவு!

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கையின் சிறந்த கட்டிடக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மஹாபிமாணி – 2014 என்ற தலைப்பில் கொழும்பு, மகரகம தேசிய இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார். இதன் போது யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவர் இலங்கையின் மிகச்சிறந்த கட்டிட நிர்மாணக் கலைஞருக்கான விருதைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு…

Read More

அபாய அறிவிப்பு (சிறப்புக்கட்டுரை)

திர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதுவரை அதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் கூட அரச தரப் பாலும் எதிர்க்கட்சிகளாலும் அதற் கான முன்னேற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு தரப்பில் மஹிந்த மூன்றாவது முறையாக வும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவது தொடர்பான சட்டபூர்வமான அங்கீகாரம் பற்றிய விளக்கத்தை உயர் நீதி மன்றத்திடம் பெறல், எதிர்க்கட்சி களை உடைத்து தம்பக்கம் பலம் சேர்த்தல், புதிய அமைச் சுப் பதவிகளை…

Read More

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக சுனாமி எச்சரிகை விடுத்தனர். நேற்று காலை 10.33 மணியளவில் அங்குள்ள தீவு நகரான கிஸ்போர்னிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அந்நாட்டின் கீழ் முனையில் உள்ள வடக்கு தீவுகள் முதல் மேல் முனையில் இருக்கும்…

Read More

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே பொதுவேட்பாளர் அறிவிக்கப்படுவார்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறி விப்பு உத்தியோகபூர்வமாக வெளி யான பின்னரே, எதிரணியின் சார்பில் களமிறங்கவுள்ள பொதுவேட்பாளர் குறித்த விவரம் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரி வித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இத னைக் கூறியுள்ளார். “ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அடுத்த வருடம் நடைபெறும் என்று ஜனாதி பதியே கூறி வருகிறார். இது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. தற்போது இந்தத் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி…

Read More

மகிந்த பொய் சொல்லுகிறார்’: சொல்ஹெய்ம்

இலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். நோர்வேயின் முன்னாளர் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் மீதான இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நோர்வே அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நோர்வேயின் பங்களிப்புடன் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் 2006-ம் ஆண்டு ஏப்ரலுடன் முறிவடைந்தது. அதன்பின்னர் மூன்று…

Read More

உறுதியான அரசை தோற்கடித்து நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை கொண்டுவர சர்வதேச நாடுகள் முயற்சி..பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

பழுலுல்லாஹ் பர்ஹான் 30 வருட யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிலிருந்து விடுபட முதற்கட்டப் பணிகளை கடந்த ஐந்து வருடங்கள் அபிவிருத்திக்கு பெரும் தொகை நிதியை செலவிட்டு நாட்டை கட்டியெழுப்பப் பாடுபட்டார். இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் நடைபெற்ற பொது நிகழ்வில் சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார். காத்தான்குடி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற தேசிய மர நடுகை தேசத்திற்கு நிழல் திட்டத்தை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தபின் பிரதியமைச்சர்…

Read More

பொது வேட்பாளர் குறித்து முடிவு!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடுபவர் குறித்து நாளை திங்கட்கிழமை முடிவு செய்யப்படவுள்ளது. இருப்பினும் இது தொடர்பிலான உத்தியோக பூர்வ அறிவிப்பு எதிர் வரும் 21 ஆம் திகதியளவிலேயே வெளியிடப்படும் என எதிர்ப்பட்சிகளை மேற்கோள் காட்டிக் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

உயர் நீதிமன்றின் விளக்கம் சபைக்குக் கிடைக்கவில்லையாம் ; கைவிரித்த சபாநாயகர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தச் சட்டச் சிக்கலுமில்லை என்று உயர் நீதிமன்றம் வழங்கிய விளக்கம் இன்னமும் நாடாளுமன்றத்துக்குக் கிடைக்கவில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதிக்கு கிடைக்கும் முன்னர் சட்டவிளக்கம் எவ்வாறு அரச ஊடகத்துக்கு சென்றது? – சட்டத்தரணிகள் கேள்வி

“ஜனாதிபதிக்கு கிடைக்கும் முன்னர் சட்டவிளக்கம் எவ்வாறு அரச ஊடகத்துக்கு சென்றது?” என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது. ஜனாதிபதிக்கு இந்த சட்டவிளக்கம் நவம்பர் 10ம் திகதியன்று கிடைத்தது. எனினும் அதற்கு முன்னர் நவம்பர் 9ம் திகதியன்று அரச ஊடகம் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தகவல்களை வெளியிட்டது. எனவே இந்த விடயத்தை சாதாரணமானதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார். இதன்போது உயர்நீதிமன்றத்தில் எத்தனை மனுக்கள் தாக்கல்…

Read More

தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும்!- விக்கிரமபாகு

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன,தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற  இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள விக்கிரமபாகு கருணாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி தவிர்க்க முடியாதது. ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி யினர் கூட்டிணைந்து ஒரு வேட்பாளரை தேர்தலில் களமிறக்குவார்கள். அதன் மூலம் அரசாங்கத்திற்கு சார்பாகவுள்ள இனவாத அடிப்படையிலான வாக்குகள் பிரிந்து செல்லும் வாய்ப்புக் காணப்படுவதால், எதிர்க்கட்சிகளுக்கு…

Read More

பொதுவேட்பாளராக போட்டியிட அர்ஜூன ரணதுங்க தயார்!

ஏற்கனவே மாதுலுவாவே சோபித தேரரின் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டுக்கு அர்ஜூன ரணதுங்க ஆதரவை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் தாம் எப்போதும் நாட்டுக்கு முன்னுரிமை வழங்குவதன் காரணமாக எந்தக் கட்சியும் பொதுமக்களும் விரும்பினால் பொதுவேட்பாளராக போட்டியிடத் தயார் என்று அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். இந்தநிலைக்கு தகுதியானவன் என்று கருதினால் தாம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் ரணதுங்க தெரிவித்துள்ளார். தாம்  ஒருபோதும் பதவிக்காக பணியாற்றியதில்லை. நாட்டை பாதுகாக்கும் விடயங்களையே முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கொண்டிருந்தாலும் தற்போது…

Read More