Headlines

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறுவதால் அரசாங்கம் பலவீனமடையாது

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறுவதால் அரசாங்கம் பலவீனமடையாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது அரசாங்கத்திலுள்ள எந்தக் கட்சிக்கும் அந்தக் கட்சிகள் விரும்பிய முடிவு எடுக்க உரிமையுள்ளது. ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த யோசனைகள் குறித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆழமாக ஆராய்ந்தது. அதிலுள்ள…

Read More

சிங்கள- பௌத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும்: இராயப்பு ஜோசப்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதுடன், சிங்கள- பௌத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயருமான இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு மூவின மக்களையும் சரிசமமாக கருத்தில் கொள்ளும் ஒருவரையே ஆட்சிப்பீடத்தில் அமர்வதற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் தரப்பு தொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசின் ஒட்டுண்ணித் தாவரங்கள் போன்றே இருக்கவேண்டும் என்ற கருதுநிலையை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அரசியல் யதார்த்தத்தை புரிந்து…

Read More

சர்வாதிகார ஆணவம் வேண்டாம்!- ஜே.வி.பி கொழும்பில் பேரணி

ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்புடன் இணைந்து ஜே.வி.பி. யினர் மேற்கொண்ட குறித்த பேரணி நேற்று மாலை மருதானை ஆனந்த கல்லூரி அருகில் ஆரம்பித்து, புறக்கோட்டை பரடைஸ் மைதானத்தில் முடிவடைந்திருந்தது. இதில் சுமார் பத்தாயிரம் பேரளவில் கலந்து கொண்டிருந்தனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம், சர்வாதிகார ஆணவம் வேண்டாம், போன்ற கோஷங்களை எழுப்பியவாறு சுலோகங்களையும் தாங்கியிருந்தனர். குறித்த பேரணி காரணமாக மருதானை முதல் புறக்கோட்டை வரையான பாதைகளில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல்…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநயாக்க அரசிலிருந்து வெளியேறினார்

அஸ்ரப் ஏ. சமத் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநயாக்க அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சி வரிசையில் அமர இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும் ஆவார். இவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3வது வரவு செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்கவும் அரசுக்கு எதிரான உரையொன்றை பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளதாகவும்…

Read More

இலங்கையுடன் வர்த்தக உறவுகளை புதுப்பிக்க ஆபிரிக்கா ஆவல்!

இலங்கையுடன் வர்த்தக உறவுகளை புதுப்பிக்க ஆபிரிக்கா ஆவலாக இருக்கின்றது. அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க சில வர்த்தக உடன்படிக்கைகளினையும் கைச்சாத்திடுவதற்கும் இணங்கியுள்ளது. மேலும் இலங்கையுடன் பல வர்த்தக தொடர்புகளை எதிர்பார்பார்கின்றோம். அடுத்த வருடம் அதிகாரபூர்வ அரச அதிகாரிகள் உட்பட வர்த்தக பிரதிநிதிகளை நைரோபிக்கு விஜயம் செய்ய அழைப்பு விடுவிக்கின்றோம். இவ்விஜயத்தினுடாக மூன்றிற்கும் மேற்பட்ட எமது வர்த்தக உடன்படிக்கைகளினையும் கைச்சாத்திடுவதற்கு சமீபத்திய ஆலோசனைகளினை தீர்மானிக்க முடியும். நேற்று (17) திங்கட்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்…

Read More

அரசாங்கத்திற்கு ஆப்பு! சம்பிக்க, கம்மன்பில அமைச்சுப் பதவியில் இருந்து விலகல்!

அத்துடன் ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பிலவும் பதவி விலகியுள்ளார். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நேற்று (17) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கோபம் இல்லை என்றும் நாட்டுக்காகவும் பௌத்த சமயத்திற்காகவும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.

Read More

முஸ்லீம்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்; ஹசன் அலி

முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையென்றால் அவர்களின் கோரிக்கைக்கும் அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். அம்பாறைக்கு தனி மாவட்டச் செயலகமொன்றை அமைத்துக் கொடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் உறுதிமொழி வழங்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டுமன்றி, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இந்த வாக்குறுதியை அளித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பொது வேட்பாளரா இல்லையா என்பது பற்றி எமக்குப் பிரச்சினை கிடையாது….

Read More

ஊவா முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் சாவு

ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்சவின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் மஹாகொடயாய பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முதலமைச்சரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற வாகனமே விபத்துக்குள்ளானது.இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read More

மூன்று தடவைக்கு மேல் தவறு விட்டால் அடையாள அட்டை இரத்து

மூன்று தடவைகளுக்கு மேல் தவறுவிடும் தனியார் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் சேவை அடையாள அட்டையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் செய்த முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பயணிகளின் பிரதான முறைப்பாடாக பஸ்கள் நேர தாமதத்தில் செல்கின்றமை, மிகுதி பணம் வழங்காமை மற்றும் பஸ்ஸுக்குள் அதிக…

Read More

ஆட்சியில் குறைப்பாடுகள் இருந்தாலும் மஹிந்தவுக்கே ஆதரவு; திஸ்ஸ விதாரண அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு லங்கா சம சமாஜ கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ஆட்சியிலுள்ள அரசாங்கத்தில் பல குறைப்பாடுகள் உள்ளன என்பதை ஏற்று கொள்கின்றோம். எனினும் நாட்டை முன்னேற்ற பாதையில் இந்த அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது. நாட்டில் ஊழல் மோசடிகள் குறித்து பேசப்படுகின்றது. செலவந்நத தரப்புக்களுடன் இணைந்து அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது ஊழல் மிகுந்த நிலைமை உருவாக சாத்தியம் உள்ளது….

Read More

ஜனாதிபதி மீது முட்டை வீச்சுத் தாக்குதல்

செக் குடியரசில் வெல்வட் புரட்சியின் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் அந் நாட்டின் ஜனாதிபதி மீது முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக செக்குடியரசின் ஜனாதிபதி மிலோஸ் ஸேமன் செயற்படுவதன் காரணமாகவே அவர் மீதான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. செக் குடியரசில் கம்பியூனிஸ்ட் ஆட்சி நிறைவுக்கு வந்தததை நினைவு கூறும் விதமாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜேர்மன் ஜனாதிபதி மீதும் முட்டை வீச்சு இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

Read More

ஒழுங்கு முறையற்ற விதத்தில் ஐ.நா.விசாரணையாம்; இலங்கை அதிருப்தி

இலங்கை மீது ஒழுங்கு முறையற்ற விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்வதாக இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. விசாரணை தொடர்பான வாக்குமூலங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடுவானது உத்தியோகபூர்வமற்ற முறையில் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக வெளி உறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளரிடம் தமது எதிர்ப்பை வெளியிட்டார். இணையத் தளத்தில் காலக்கெடு அக்டோபர் 30 எனத் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர்…

Read More