Headlines

பலஸ்தீனை உடனடியாக தனி நாடாக அங்கிகரிக்க வேண்டும் – பிரான்ஸ் பாராளுமன்றம்

பலஸ்தீனீல் இஸ்ரேல் தொடர்ந்து அத்துமீறி வருவதால் அதை முடிவுக்கு கொண்டு வருவதர்க்காக பலஸ்தீனை தனி நாடக பிரன்ஸ் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பிரன்சின் ஒஸான்சா(Osansa) உள்ளிட்ட பாரள மன்ற உறுப்பினர்கள் நேற்று கோரிக்க்கை வைத்தனர் பலஸ்தீனை தனி நாடக அங்கிகரிப்பது குறித்து உடனடியாக பாரளமன்றத்தில் வாக்கு எடுப்பு நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என்று அவர்கள் பிரான்ஸ் அரசை வேண்டி கொண்டிருப்பதோடு நடப்பு நாடாளமன்ற கூட்ட தொடரில் விவாதிக்க பட வேண்டிய விசயங்களின் பட்டியலில் பலஸ்தீனை அங்கீகரிப்பது…

Read More

கொழும்பில் முகாமிட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்

முஸ்லிம் காங்கிரஸ் அடுத்துவரும் தினங்களில் முக்கிய தீர்மானங்களை அறிவிக்கவுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் கொழும்பில் முகாமிட்டுள்ளனர். கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க, மு.கா. முக்கியஸ்தர்கள் கொழும்புக்கு வந்திருப்பதாக கட்சியின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். (JM)

Read More

ஜனாதிபதி தேர்தலில் 2 முஸ்லிம்களும் போட்டி, கட்டுப்பணமும் செலுத்தினர்

அஷ்ரப் ஏ சமத் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. ஜனசெத பெரமுன சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன, ஒக்கொம ரஜவரு கட்சியின் சார்பில் எம்.பீ.தெமினிமுல்லே, சமாஜவாதி சமனதா கட்சியின் சார்பில் பானி விஜேசிங்க ,எக்சத் சமாஜவாதி கட்சியின் சார்பில் விஜேசிங்க சிறிதுங்கவும் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ராஜபக்ஷ…

Read More

”ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணித்தியாலங்களில் பொன்சேகாவின் வரப்பிரசாதங்களை மீளளிக்கப்படும்”

தாம் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் சில மணித்தியாலங்களில் முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் அகற்றப்பட்ட அனைத்து தரங்களையும், வரப்பிரசாதங்களை மீளளிக்கவுள்ளதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கு ஜனநாயக கட்சி எடுத்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது வேட்பாளர், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு முகம்கொடுக்க நேர்ந்த சம்பவங்கள் தொடர்பாக அரசாங்க அமைச்சர் என்ற…

Read More

ஊழலில் இலங்கை முன்னேற்றம் – டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல்

டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள சர்வதேச ஊழல் தொடர்பான சுட்டெண்ணின் பிரகாரம் 177 நாடுகளில் இலங்கை 85 ஆம் இடத்திலுள்ளது. கடந்த வருடம் இந்த பட்டியலில் இலங்கை 91 ஆம் இடத்திலிருந்தது. இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் 38 புள்ளிகளைப் பெற்று 85 ஆவது இடத்திலுள்ளன. 92 புள்ளிகளைப் பெற்று ஊழல் குறைந்த நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளதுடன், ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் வட கொரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் முதலிடத்தில்…

Read More

முல்லை. நீரா யூத் அமைப்பு- அமைச்சர் றிஷாத் சந்திப்பு

முஹம்மட் ரிபாக் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட நீரா யூத் கிளப் அமைப்பினருக்கும்;, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீராவிப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக விஷேட கலந்துரையாடலொன்றுக்கு அமைச்சர் வருகை தந்தபோதே குறித்த இளைஞர் அமைப்பினர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் குடிசைக் கைத்தொழில் அபிவிருத்தி திட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச இணைப்பாளர் ஏ.ஜி.சிப்ரியின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தின்…

Read More

மருதமுனையைச் சேர்ந்த சஞ்ஜித் சட்டக்கல்லூரிக்கு தெரிவு

ஏ.எச்.எம். பூமுதீன் 2015 சட்டக்கல்லூரி அனுமதிக்கான போட்டிப் பரீட்சையில் மருதமுனையைச் சேர்ந்த சஞ்ஜித் அகமட் சித்தியைடைந்துள்ளார். மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் மூத்த ஆசான்களில் ஒருவருமான எம்.எச் காதர் இப்ராஹிமின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்து. கல்முனை மாநாகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எம் ரகீபின் மைத்துனரும் ஆவார்

Read More

5 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை

இந்த வருடத்திற்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் 5 ஆம் திகதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, சிங்கள, தமிழ் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக 5ம் திகதி மூடப்படும் எனவும் 2015 ஆம் ஆண்டு முதல் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி 5 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் தவணை ஏப்ரல் 8 ஆம் திகதிவரை இடம்பெறும். முஸ்லிம் பாடசாலைகள்…

Read More

தேசிய அரசில் இணையுமாறு மஹிந்தவுக்கு பகிரங்க அழைப்பு

அமையப்போகும் தேசிய அரசில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்தவுக்கு நேற்று முன்னாள் அமைச்சரும், ஜாதிக யஹல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்தார். “தேசிய நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்படவுள்ள இப்புதிய அரசில் இணைந்துகொள்வதற்காக பல பிரதானக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. ஆகவே, ஜனாதிபதி மஹிந்த­வும் அவருடைய ஆதரவாளர்களும் இதில் ஒரு பங்காளியாக இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்”  என சம்பிக்க மேலும் தெரிவித்தார். அத்தோடு, யுத்தக் குற்றச்சாட்டுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும்…

Read More

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் – இன்று

உலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா சார்பில் 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Read More

பந்துல நாட்டை விட்டு வெளியேற ஆயத்தம்?

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த போட்டியிடும் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் குழுவின் முக்கியஸ்தரான அமைச்சர் பந்தல குணவர்த்தன திடீரென வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அரசின் முக்கிய அமைச்சர்கள் குழப்பத்தில் இருப்பதுடன் இவரின் விஜயத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமைச்சரின் வெளிநாட்டு விஜயம் எதற்கானது என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை. (ஒ)

Read More

மைத்திரிபால சிறிசேன ராஜபக்‌ச படையணியை விரட்டுவார்; ரணில் விக்கிரமசிங்க

ராஜபக்‌ச படையணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மைத்திரிபால சிறிசேனவை நாம் பொது வேட்பாளராகக் களமிறக்கிப் போராட்டம் செய்கின்றோம், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கெளதம புத்தர் சமாதானமாக ஒன்று கூடுங்கள், சமாதானமாகப் பேசுங்கள், சமாதானமாகக் கலைந்து செல்லுங்கள் எனப் போதனை செய்தார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தலைமையிலான அரசினர் தனியாக ஒன்றுகூடி; தனியாகப் பேசி; தனியாக முடிவெடுக்கின்றனர். உலகில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உள்ள நாடுகளில் 2 தடவைக்கு…

Read More