Headlines

ஜனாதிபதி தேர்தல்-2015: செய்தித் துனுக்குகள்

1. மன்னார் மாவட்டத்தின் ஜனாதிபதியின் தேர்தல் வேலைகளுக்காக அமைச்சர் றிசாத்பதியுத்தீன் நியமிக்க பட்டு இருந்தார். அவர் எதிரணிக்குச் சென்றதால், மன்னாரில் ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பனிகளை கண்காணிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவை ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் குழு நியமித்துள்ளது. 2. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இன்று பி.பகல் தமிழ் பத்திரிகைகளில் விசேட பேட்டி ஒன்றை வழங்கினார். அதில் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் எதிர்தரப்பு சென்றமை பற்றியும் அதனைக் கண்டித்தும் வடக்கு முஸ்லீம்களை றிசாத்…

Read More

மத்தள விமான நிலையம் அமைக்க 27 பில்லியன் கடன், வருமானமோ மாதம் 16000 ரூபா – சம்பிக்க ரணவக்க

ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலைய அமைப்புக்காக 27பில்லியன் ரூபாய்கள் கடனாக பெறப்பட்டுள்ளன. எனினும் அந்த விமான நிலையத்தின் மாத வருமானம் 16,000 ரூபாவாகும். இந்தநிலையில் குறித்த 27 பில்லியன் ரூபாய் கடனை செலுத்துவதற்கு 144, 000 வருடங்கள் பிடிக்கும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மனித குலம் பரிணாம வளர்ச்சி ஏற்படு;த்தப்பட்டு 143 வருடங்கள் கடந்துள்ளன இந்தநிலையில் மத்தள விமான நிலையத்தின் கடன்களை அடைப்பதற்கும் மனித குல பரிணாம வளர்ச்சியின்…

Read More

”வெள்ளை மாளிகை, பென்டகன் வீழ்த்தப்படும்” வடகொரியா

சோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மீதான சைபர் தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவுக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதி எங்கும் தாக்குதல் நடத்தப்போவதாக வட கொரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சோனி பிக்சர்ஸ் திரைப்பட தயா ரிப்பு நிறுவனத்தின் கணனி வலயமைப்பில் அத்துமீறி நுழைந்து செய்யப்பட்ட சைபர் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா இருப்பதாக அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டை வடகொரியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கு எதிராக வட கொரியா வெளியிட்ட எச்சரிக்கை…

Read More

அனைத்து அரச ஊழியர்களும் மைத்திரிக்கே வாக்களியுங்கள்- றிசாத் பதியுதீன்

இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படவும் ஜனநாயகம் வளரவும் முஸ்லிம் மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் பாதுகாப்பு, சுய கௌரவம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இன்று  (2014-12-23) இடம் பெறும் தபால் மூல வாக்களிப்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்கிளித்து அவரது வெற்றியை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Nதிசயத் தலைவர் ரிசாத் ;பதியுதீன் அரச ஊழியர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது – இந்த நாட்டில் புரையோடிப்போயிருந்த இனப்…

Read More

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது ஏன்? றிஷாத் பதியுதீன் விளக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத்பதியூதீன், மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக நேற்று அறிவித்துள்ளார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இதன்போது இணைந்து கொண்டமை குறிப்பிடக்கத்தது. ஒரு குடும்பமாக வாழ வேண்டிய இந்த சிறிய நாட்டில், பிரிவினையை ஏற்படுத்தி, பிரச்சினைகளை உருவாக்கியமையை நீங்கள் அறிவீர்கள். அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவை அமைச்சர் என்ற விதத்தில், ஜனாதிபதிக்கும், குறிப்பிட்ட பாதுகாப்பு பிரிவினரும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாம் தெளிவுப்படுத்தியிருந்தோம். அதனை நிறுத்துமாறும் நாம் கோரிக்கை…

Read More

இனி எனது பாதுகாப்பு உட்பட அனைத்தும் இறைவனிடம்தான் உள்ளன – றிஷாத் பதியுதீன்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்  ஆளுந்தரப்பிலிருந்து விலகி எதிரணி பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தீர்மானித்து விட்டார். அதன்படி இன்று (22) எல்லாம் நடந்து முடிந்து விட்டன. தனது அமைச்சுப் பதவியையும் அவர் இராஜினாமா செய்து விட்டார். இவையெல்லாம் இன்று பகலுடன் நடந்து பரபரப்பு அடங்கிய நிலையில் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அப்போது அவர் என்னிடம் தெரிவித்த சில கருத்துகளை மனதை நெருடச் செய்தன. மிக சக்திமிக்க அமைச்சுப் பொறுப்பை ராஜினாமாச் செய்து விட்டேன்….

Read More

றிஷாத் பதியுதீன் மைத்திரியுடன் சற்று முன்னர் இணைந்தார்

அமைச்சர் றிஷாத் பதியுதீன் பொதுவேட்பாளருடன் சற்று முன்னர் இணைந்தார். அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி உட்பட அ.இ.ம.காவின் 73 மக்கள் பிரதிநிதிகள் சற்று முன்னர் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுடன் இணைந்தனர். இந்நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரம சிங்கவின் ஊடக காரியாலத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. ரணில் விக்கரமசிங்க ,சந்திரிக்கா பண்டாரனாயக்கா, ராஜித மற்றும் அஸாத் சாலி என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

Read More

முஸ்லிம்கள், மைத்திரிபால சிறிசேனாவை நம்பக்கூடாது, மஹிந்தவை நம்புங்கள் – அஸ்வர்

மைத்திரி அணியில் சேர்ந்துள்ளவர்கள் முஸ்லிம்களுக்கும். சிறுபான்மை மக்களுக்கும் எதிராகச் செயற்படுபவர்கள். மைத்திரியுடன் சேர்ந்துள்ள ஹெல உறுமய செயலாளர் சம்பிக்க ரணவக்கவின் ஒப்பந்தத்ததில் சிறுபான்மை மக்கள் நலன் பேணல் பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. இது குறித்து சிறுபான்மை மக்கள் தெளிவு பெற்று வாக்கை சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார. தகவல் ஊடக சிரேஷ்ட ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி சகிதம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று…

Read More

மைத்திரிபாலவின் புதிய அமைச்சரவை விபரம் – சண்டேலீடர் பத்திரிகை தகவல் (விபரம் இணைப்பு)

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் புதிய தேசிய  அரசாங்கம் அமைக்கப்படும் என்று பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், அந்த அரசாங்கம்  18 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்குமென்று ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல் கசிந்திருப்பதாக “சண்டே லீடர்’ நேற்று ஞாயிற்றுக்கிழமை  தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தில்  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவி வகிப்பார்களென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு நிதியும் அத்துரலிய ரத்ன தேரருக்கு…

Read More

அரசு என்னை கொலை செய்ய முயற்சி: மைத்திரி

தமக்குள்ள பாதுகாப்பை அகற்றி விட்டு அரசு என்னை கொலை செய்யவே முயற்சிக்கிறது என எதிரணியின்  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலகமுவையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்  பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் தனக்கான பாதுகாப்பிற்கு 7  பாதுகாப்பாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக் ஷவிற்கு எந்தளவு பாதுகாப்பு உள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளனர். எனினும் மக்களின் ஆதரவு பாதுகாப்பும் எனக்கிருப்பதால் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை….

Read More

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணிக்க பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளார் – மைத்திரிபால சிறிசேன

மக்களின் துயரங்களை அறிந்த தலைவன் என்ற வகையில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கியுள்ளார்.நேற்று நடைபெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி திகண பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியின்  பிரதிநிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணிக்க…

Read More

மக்களைப் பற்றி சிந்தித்தே நாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்

ஏன் ஜக்கிய தேசிய கட்சிக்கு நானும் அல்லது நவீன் திசாநாயக்க உட்பட மற்றவர்களும் வந்தார்கள் என்பது பலருக்கும் புரியாமல் உள்ளது.அதற்கு காரணம் இந்த நாட்டில் நடக்கும் அநீதிகளை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.நாங்கள் நினைத்திருந்தால் அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு அங்கிருந்திருக்கலாம். ஆனால் மக்களை பற்றி சிந்தித்ததன் காரணமாகவே அரசாங்கத்தைவிட்டு வெளியில் வந்தோம் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ. இராஜதுரை தெரிவித்துள்ளார். நுவரெலியா மாநகர சபையின் புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற பொது வேட்பாளரை…

Read More