Headlines

எகிப்தில் ஒரே இடத்தில் 10 லட்சம் மம்மிக்கள், நெக்லஸ்-வளையல் அணிந்திருந்த குழந்தை மம்மி

எகிப்தின் மத்தியில் உள்ள ‘பாயும்’ நகரில் 300 ஏக்கர் மயானத்தில் 10 லட்சம் மம்மிக்கள் உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் உடாஹ் நகரில் உள்ள ப்ரிகாம் யங் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு குழு பாக்-இல்-கேமஸ் என்ற மயானத்தை கடந்த 30 வருடங்களுக்கு முன் கண்டுபிடித்தது. கடந்த முப்பது வருடங்களாக அக்குழுவினர் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த 300 ஏக்கர் மயானத்திலிருந்து இதுவரை 1700 மம்மிக்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர். 75 அடி ஆழம் வரை…

Read More

சோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லை – மைத்திரிபால சிறிசேன

தாம் சோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவரல்ல என்று ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சோதிடக்காரர்கள், பொதுமக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை பரப்புகின்றனர். தம்மை பற்றியும் சில சோதிடர்கள் பல கதைகளை கூறுகின்றனர். இந்தநிலையில் தாம் எதிர்வரும் முதலாம் திகதி நல்லாட்சி தொடர்பில் மஹிந்த ராஜபக்சவை விவாதத்துக்கு அழைத்துள்ளமையை மைத்திரிபால நினைவுப்படுத்தினார். அண்மையில் தாம் கூறிய கருத்துக்கு பிழையான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேற தடைவிதிக்கப்படும் என்று அர்த்தம் அதற்கு கற்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்….

Read More

முஸ்லிம்களின் வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்காது – கே.டி. லால்காந்த

பண்டாரநாயக்கவின் கொள்கைகளின் அடிப்படையில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தற்போது மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்க போவதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒரு பகுதியினர் பிரிந்து சென்று விட்டனர். அந்த கட்சியில் இருக்கும் சிலருக்கு வாக்குரிமை கூட இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல வாக்குகளும் கிடைக்கும்…

Read More

காத்தான்குடியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ள தேர்தல் மேடை

இன்று (19) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ளார்

Read More

மைத்திரிபாலவுக்காக புதுக்கடையில் ஐக்கிய தேசியக்கட்ச்சியின் காரியாலையம்

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாகவும், மத்திய கொழும்பில் இலங்கையின் அரசியல் வராலாற்றில் சரித்திரம் படைக்கும் வெற்றியாக மத்திய கொழும்பில் பொது வேட்பாளருக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடனும் நாளை (20) சனிக்கிழமை 5.00 மணிக்கு மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் உள்ள புதுக்கடை அப்துல் ஹமீட் வீதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயம் மேல் மாகாண சபை உறுப்பினர்களாகவும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களாகவுமுள்ள…

Read More

அமெரிக்க கியூப உறவில் வரலாற்றுத் திருப்பம்!:கியூபாவில் அமெரிக்கக் கைதி விடுவிப்பு

செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவின் அதிபர் ரௌல் காஸ்ட்ரோவுடன் சுமார் 1 மணித்தியால நேரமாகத் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன் மூலம் அமெரிக்கா கியூபா இடையே வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தம் எட்டப் பட்டதுடன் இதன் ஒரு பகுதியாக 2009 ஆம் ஆண்டு முதல் தான் சிறைப் பிடித்து வைத்திருந்த அமெரிக்க ஒப்பந்ததாரரான அலன் கிரொஸ் என்பவரை இன்று புதன்கிழமை கியூபா விடுவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று நடந்த உரையாடல் 1953 கியூபப் புரட்சிக்குப் பின்னர் கியூப…

Read More

உரியவர்கள் கவனம் செலுத்துவார்களா?

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை (வடக்கு) 206 A எனும் கிராம சேவகர் பிரிவின் ஹுஸைன் வைத்தியர் வீதியில் உள்ள மேற்படி காணியானது பராமரிப்பு அற்ற நிலையில் காணப்படுகின்றமையால் இக்காணி முழுவதும் குப்பை கூளங்களாக காணப்படுவதுடன் தற்போதய நிலையில் மழை காரணமாக நீர் தேங்கி அதன் விளைவாக டெங்கு பரவும் அபாயமும் காணப்படுகிறது. தற்சமயம் இவ்வீதியில் வசிக்கும் பாடசாலை செல்லும் மாணவன்  தொடர்த்தேர்ச்சையான காய்ச்சல் காரணமாக வாழைச்சேனை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு 8 நாட்கள்…

Read More

துப்பாக்கி ஏந்துவது மாத்திரம் படையினரின் பணியல்ல!

ஸாதிக் ஷிஹான் நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளில் யுத்த வெற்றிக்கு பங்களிப்பு செய்த படை வீரர்களையே பயன் படுத்துவதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இவ்வாறு யுத்தத்திற்கு பங்களிப்பு செய்த இராணுவத் தினரை கூலி வேலையில் அமர்த்துவதாகவும், தரக்குறைவாக நடத்துவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு க்களை முற்றாக மறுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மாறாக யுத்தத்திற்கு பிறகு தொழில்…

Read More

போஸ்டர்கள், கட்அவுட், பெனர்கள் அகற்றும் பணிகளை கண்காணிக்க விசேட பொலிஸ் குழு

தேர்தல் பிரசாரங் களுக்காக முன்வை க்கப்படும் கட் அவுட்கள் மற்றும் பெனர்கள் சரிவர அகற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க பொலிஸ் திணைக் களம், பொலிஸ் கண்காணிப்பு குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் ஆங்காங்கே போஸ்டர், கட்அவுட் அகற்றும் பணிகள் முறையாக இடம் பெறுகின்றனவா என்பதனை கண் காணிப்பரெனவும் பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார். நாடு முழுவதும் போஸ்டர், கட்அவுட் அகற்றும் பணிக்காக 12 ஆயிரம் பொலி ஸாரும் அதற்கு மேலதி கமாக…

Read More

எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது : பிரிவினையை தோற்கடியுங்கள் – ஜனாதிபதி

செல்வநாயகம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை தொடர்ந்து எதிர்காலத்திலும் முன்னெடுப்பதே எமது திட்டம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளி நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயல்வோரிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க எதிர்வரும் 8ம் திகதி வெற்றிலைக்கு மக்கள் வாக்களித்து முழுமையான ஆதரவினை வழங்குவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். 8ம் திகதி வெற்றிலைக்கு வாக்களித்து அமோக வெற்றியை உறுதி செய்து 9ம் திகதி நாம்…

Read More

பிரதான கட்சிகளை பலவீனப்படுத்தி நாட்டை குழப்பும் சூழ்ச்சிகளில் சர்வதேசம்

கே. அசோக்குமார் பிரதான அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் பலவீனமடையச் செய்யும் முயற்சிகளில் சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக மக்கள் மிகவும் விளிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் யாப்பா கேட்டுக்கொண்டார். ஐ.ம.சு. முன்னணியின் செய்தியாளர் மாநாடு நேற்று ஸ்ரீல.சு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து ஐ.தே.க.வினரை ஓரங்கட்டி ஐ.தே.க. முழுமையாக பலமிழக்கச்…

Read More

ஷார்ஜாவில் பால்கனியில் துணி காய போட்ட 6,500 வீடுகளுக்கு ₹ 5.63 கோடி அபராதம் !

மிகப்பெரிய நகரங்களில் குடியிருப்பு வீடுகளில், வீட்டு பால்கனியில் துணிகளை சலவை செய்து உலர்த்துவதற்காக தொங்க விட்டு இருப்பது வாடிக்கை. ஆனால் அமீரகம் ஷார்ஜாவில் இவ்வாறு துணிகளை சலவை கடைபோல் தொங்கவிடுவது நகரின் அழகு மற்றும் தூய்மை பாதிக்கின்றது என கூறி இதற்கு தடை விதித்து உள்ளது. இவ்வாறு தொங்கவிடப்படும் வீடுகளூக்கு 500 திராம் அபராதம் விதிக்க உத்தரவிட்டு உள்ளது. தரற்போது இதையும் மீறி ஷார்ஜா நகரில் பால்கனிகளில் துணிகள் உலர்த்தப்படுகின்றன. அவ்வாறு பால்கனியில் துணிகள் உலர்த்தும் வீடுகளூக்கு…

Read More