Headlines

வைக்கோவுக்கு சாமி எச்சரிக்கை

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்ரமணிய சுவாமி தனது ருவிட்டர் பக்கத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’தூக்கி எறியப்படுவதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நீங்களாக வெளியேறி விடுங்கள்’’ என்று வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை ஆளும் அரசிலிருந்து மதிமுக கட்சி விலக வேண்டும் என கட்சித் தொண்டர்கள் எற்கனவே கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Read More

ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்கிறார் இந்திய பாதுகாப்பு ஆலோசகர்

இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்களை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சந்திக்கவுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தோவால், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்க உள்ளார். 2014 காலி பேச்சுவார்த்தை நிகழ்வில் சிறப்பு உரையொன்றை தோவால் ஆற்ற உள்ளார். அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர்…

Read More

சிறிசேன நிகழ்த்திய திடீர் புரட்சி!

அடுத்த வருடம் நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர் தலில் போட்டியிட உள்ள பொது எதிரணியின் கூட்டமைப்பா னது இலங்கை அரசியலில் எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்ற நிலையை தோற்று வித்துள்ளது. மைத்திரிபால சிறிசேன வுக்கு பொருத்தமான எதிர்த் தரப்பு வேட்பாளராக இருக்கும் தகுதி இருக்கிறதா என்பதில் சிறு சந்தேகமிருக்கலாம். ஆனால், அவரது தகுதியை மேலும் உயர்த் தும் வகையில் பல பிரமுகர் களும் அரசியல்கட்சிகளும் அவ ரைச் சார்ந்து நிற்கிறார்கள். இந்தப் பட்டியலில் முதன்மை வகிப்பவராக…

Read More

ஜாதிக ஹெல உறுமய மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு

புரிந்துணர்வின் மூலம் இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக ஜாதிக ஹெல உறுமய குறிப்பிடுகின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளதாக ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் அதுரலியே ரத்தன தேரர் தெரிவிக்கின்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை பாராளுமன்றத்திற்கும், நீதிமன்றத்திற்கும் பொறுப்புக்கூறும் வகையில் மறுசீரமைத்தல், தேர்தல் முறைமையில் மாற்றம், ஆணைக்குழுக்களை நியமித்தல் போன்ற அடிப்படை காணரங்களை உள்ளடக்கியதாக புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக ரத்தன தேரர் கூறுகின்றார்….

Read More

அமைச்சர் றிஷாதின் முடிவுக்கு தலைவணங்குவோம்! வவுனியா மாவட்ட தமிழ் மக்கள் அதிரடி அறிவிப்பு (படங்கள் இணைப்பு )

ஏ.எச்.எம்.பூமுதீன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவருக்கு ஆதரவளிக்க அமைச்சர் ரிசாத் பதயுதீன் முடிவு செய்கிறாரோ அந்த முடிவுக்கு நாம் தலைவணங்குவோம் என வவுனியா தமிழ் மக்கள் இன்று அறிவித்துள்ளனர். வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (29) காலை இடம்பெற்ற தேர்தல் தொடர்பில் மக்களின் கருத்தை அறியும் கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பை தமி;ழ் மக்கள் விடுத்தனர். வவுனியா மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் பல்வேறு துறைசார்ந்தோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். இதன்போது அவர்கள் அனைவரும் கலந்துரையாடலின் முடிவில் எழுந்து…

Read More

மௌலவி ஆசிரியர் நியமனம் – ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பது பற்றி ஆலோசனை

2010ம் ஆண்டுக்குப்பின் வழங்கப்படாதிருக்கும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை மீண்டும் வழங்கக்கோருவது பற்றி ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன் வைப்பது பற்றிய ஆலோசனை கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய உலமா கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக இது பற்றிய கருத்தரங்கை கல்முனையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். 1992 முதல் வழங்கப்படாதிருந்த மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்காக உலமா கட்சி பாரிய அளவில் போராடியதன் பயனாக கடந்த…

Read More

மஹிந்த ராஜபக்ஸவையும், அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பேன் – மைத்திரிபால சிறிசேன உறுதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களோ அல்லது சர்வதேச சக்திகளோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச்செயல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஜனாதிபதியையோ அல்லது படைவீரர்களையோ நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். சரியான நல்லிணக்கத் திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், அனைத்து இனங்களுக்கு இடையிலும் நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மைத்திரிபால…

Read More

மைத்திரியின் முன்மாதிரி

-tM- எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் பொலித்தீன், கட்டவுட், போஸ்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் கூட்டங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கூட்டம் நடைபெறும் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் பிரசார சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் சில நாட்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் பரீட்சை நிலையங்கள் நடைபெறும் இடங்களை அண்மித்த பகுதிகளில் எந்தவொரு பிரசார நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர்…

Read More

கல்குடாத் தொகுதி முஸ்லீம்களின் தீர்மானமே எனது அரசியலில் இறுதித் திர்மானமாக இருக்கும்: அமீர் அலி

வாழைச்சேனை நிருபர் கல்குடாத் தொகுதியில் உள்ள முஸ்லீம்களின் தீர்மானமே எனது அரசியலில் இறுதித் திர்மானமாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ள நிலையில் அது முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,…

Read More

கோப்புகளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன….?

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஓரிரு வாரங்களுக்குள் இலங்கை அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள், கட்சித் தாவல்கள், விமர்சனங்கள் மற்றும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சிகள் போன்றவை நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்களை எச்சரிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிய ‘அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் பற்றிய கோப்புகள் தன்னிடமிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக தான் அவற்றைப் பயன்படுத்தப் போவதில்லை’ எனும் கூற்றானது இந்நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு அதிர்வலைகளையும் கேள்விகளையும் எழச்செய்துள்ளது. இவ்வாறு கோப்புகளைக் காட்டி எச்சரிக்கை…

Read More

மஹிந்த ராஜபக்சவுக்கு 40 வீதமான தமிழ் மக்கள் வாக்களிப்பர்: சுவாமி

இலங்கையில் 40 வீதமான தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே தேர்தலில் வாக்களிப்பார்கள் என பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில் இவ்வாறு கூறியுள்ள அவர், கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றால் இலங்கை தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கனவை நனவாக்க தான் உதவி புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அதேவேளை, மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள்  5 பேரையும்…

Read More

சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய பின் விசா!

43 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கோவா உள்பட 9 நகர விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இ-விசா வழங்கும் திட்டம் வியாழக்கிழமை துவங்கி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, பிரேசில், கம்போடியா, குக் தீவுகள், பிஜி, பின்லாந்து, ஜெர்மனி, இந்தோனேசியா, இஸ்ரேல், ஜப்பான், ஜோர்டான், கென்யா, க்ரிபாட்டி, லாவோஸ், லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், மொரீஷியஸ், மெக்சிகோ, மைக்ரோனேசியா, மியான்மர், நியூசிலாந்து, நார்வே, ஓமன், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கொரியா, ரஷ்யா, சமாவ், சிங்கப்பூர், சாலமன் தீவுகள், தாய்லாந்து, டோங்கா, ஐக்கிய அரபு…

Read More