அதுரலிய ரதன தேரரின் முக்கிய முடிவு, இன்று வெளியாகிறது..!
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் இன்று 14-10-2014 முக்கிய சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார். ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் தீர்மானமிக்க ஓர் சந்திப்பினை நடத்த உள்ளார். தூய்மையான நாளை என்ற அமைப்பின் தலைவராக செயற்பட்டு வரும் ரத்ன தேரர், அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்திருந்தார். தமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்….
