Headlines

தேர்தல் முடிவுகள் முழு முஸ்லிம் சமூகத்தின் முகத்தின் மீது சேறைவாரி வீசியுள்ளது z

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டு எதிர்பாராத தோல்வியை தழுவியமை வேதனைக்குரியது. இந்த இரு கட்சிகள் மீதான தனிப்பட்ட ஆதரவுத் தளம் என்பதற்கு அப்பால் இந்தத் தோல்வியை நோக்கும் போது அது முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் முகத்தில் சேறைவாரி வீசியுள்ளது என்றே நான் கூறுவேன். இந்த இரு கட்சிகளும் ஐக்கியப்பட்டது போன்று முஸ்லிம் மக்களின் ஐக்கியமும் தேவையென்ற நிலைப்பாட்டில் இருந்தவன் நான்….

Read More

அருண் செல்வராஜின் ஆவணங்கள் போலியானவை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரான அருண் செல்வராஜாவுக்கு போலி கடவுச் சீட்டு தயாரிப்பாளர்களுடன் தொடர்பிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன. அருண், கடந்த 10 ஆம் திகதி தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதன்போது இவர் 5 ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து நாசவேலைக்கு சதிதிட்டம் தீட்டியதும் அம்பலமானது. அருண்செல்வராசனை, பாகிஸ்தான் உளவாளியாக மாற்றியதில் அதிகாரிகள் 2 பேர் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை நடத்துவதற்காக கடந்த 18ஆம் திகதி…

Read More

வட அமெரிக்காவில் முதல் இஸ்லாமிய அருங்காட்சியகம்

கனடாவின் டொரொண்டோ நகரில், இஸ்மாயிலி முஸ்லிம்கள் புதிய இஸ்லாமிய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். முழுக்க இஸ்லாமிய கலைப்படைப்புகளுக்கென வட அமெரிக்காவில் உருவாக்கப்படும் முதல் அருங்காட்சியகம் இதுதான்.

Read More

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க் பயணம்!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் பயணமானார். ஜனாதிபதியுடன் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ் குணவர்தன. ஏ. எச். எம். அஸ்வர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரேணுகா செனவிரத்ன உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டின் பொது அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 25ஆம்…

Read More

5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பம்

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக  5 இலட்சத்து 78,135 பேர்  விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.இவர்களில் 3 இலட்சத்து 70,030 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவிக்கின்றார்.பரீட்சை நிலையங்களை ஒழுங்குபடுத்தும்  நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் சில விடயங்களின் முதற் கட்ட நடவடிக்கைகளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி  கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.

Read More

ஜனாதிபதிக்கு விசேட இணையதளம்

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை ஜனாதிபதி கொண்டுள்ள தொடர்புகள், நடவடிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தும் வகையில் விசேட இணையத்தளமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக ஜனாதிபதி இந்த இணையதளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். பின்வரும் முகவரியினூடாக http://unga.president.gov.lk இந்த புதிய இணையதளத்தை அணுகமுடியும். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்குபற்றுதலுடன் தொடர்பான, நியூயோர்க்கில் இடம்பெறும் ஏனைய உத்தியோகபூர்வ நிகழ்வுகளும் மும்மொழிகளிலும் உரிய காலத்தில்…

Read More

யாழ்.தேவியின் பரிட்சார்த்த ஓட்டம் தொடர்கிறது

யாழ்ப்பாணத்திற்கான சேவையினை முழுமையாக வழங்கும் வகையில் யாழ்தேவியின் பரீட்சார்த்த ஓட்டம் இன்றும் தொடர்ந்தது.பளை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை இன்று பகல் 11 மணியளவில் வந்தடைந்தது. இன்றைய வெள்ளோட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், ஆளுநரின் செயலர் இளங்கோவன் மற்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.இன்றும் ரயிலைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் காணக்கூடியதாக…

Read More

நியூயோர்க்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதை கண்டித்து  நியூயோர்க்கில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த பேரணி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியில் எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்.

Read More

சவூதி உதவியில் மருதானையில் குடும்ப நடைமுறை நிலையம் திறப்பு

இலங்கை இஸ்லாமிய நிலையத்துடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகம் அமைத்துள்ள குடும்ப நடைமுறை நிலையமும், உடல்சார் சிகிச்சைப் பிரிவும் மருதானை பியதாச சிரிசேன மாவத்தையில் செப்டம்பர் 24ஆம் திகதி காலை திறந்து வைக்கப்படும். இஸ்லாமிய நிலையத் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான எம். எச். முஹம்மத் தலைமையில் நடைபெறும் இவ் வைபவத்தில் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். சவூதி அரேபிய இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி அநுசரணையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More

ஊவாவில் தோற்றது முஸ்லிம்களே – ஏ.எல்.தவத்தின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை

“ஊவாவில் தோற்றது முஸ்லிம்களே, முஸ்லிம் கூட்டமைப்பல்ல” என்ற  கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் ஊடக அறிக்கை தொடர்பாக, உண்மைதான், நீங்கள் சொல்வது போல முஸ்லிம் கூட்டமைப்பு தோற்கவில்லை ஏனெனில் அரசாங்கத்தின் தேவைப்படி ஐ.தே.கட்சி சார்பில் ஒரு முஸ்லிம் உறுப்பினரையும் வெற்றி பெற விட்டுவிடக் கூடாது என்பதை மறைமுகமாக வைத்து களமிறக்கப்பட்ட உங்கள் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதும் ஊவா முஸ்லிம்கள் கடந்த முறைபோல இம்முறையும் பிரதிநிதித்துவம் இன்றி தோற்றுவிட்டார்கள் என்பதும் வெறுப்பூட்டும் ஆனால் ஏற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரும்…

Read More

ஞானசாரரிடம் பொலிசார் விசாரணை

கண்டியில் மதவழிபாட்டுத் தலம் ஒன்றின் மீதான தாக்குதல் குறித்து ஞானசார தேரரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், கண்டியில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத் தலம் ஒன்றின் மீது குண்டர்கள் சகிதம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இதற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக ஞானசார தேரரிடம் நேற்று பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு அவரை அனுப்பியுள்ளனர்….

Read More

இலங்கைக்கு வந்த விமானத்தை, பறவை தாக்கியது – விமானம் அவசர தரையிறக்கம், காற்றாடி பழுது

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2:30 ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை புறப்பட்டது. ஓடு பாதையில் இருந்து விமானம் மேலே எழும்பியபோது பறவை ஒன்று விமானம் மீது மோதியது. விமானத்தின் முன்பக்க காற்றாடியில் பறவை சிக்கியதால் காற்றாடி பழுதடைந்தது. இதை கவனித்த விமானிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். விமானத்தில் இருந்த 139 பயணிகளும் திருச்சி ஹோட்டலில் தங்க…

Read More