Headlines

முல்லைத்தீவில் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் மின்சார இணைப்புக்கள் வழங்கிவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை மின்சாரம் கிடைக்காத தமிழ் குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட மின்சாரம் வழங்கும் நிகழ்வு இன்று 03 புதன்கிழமை இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாமுனை, பூவரசன் வெளி, குமுளமுனை ஆகிய பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியினால் மின்சாரம் இணைப்புக்கள்  வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய அமைச்சர்- இது வரை மின்சாரம் கிடைக்காத முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று கிராமங்களுக்கு இரண்hடம் கட்ட…

Read More

ISIS மீது குண்டு மழைப் பொழியும் அமெரிக்கா

ஈராக்கில் 124 தடவை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியுள்ளன. இதனால் ISISகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்தீஷ் படைகள் பல பகுதிகளை மீண்டும் மீட்டுள்ளனர். மொசூல் அணையும் ISIS களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதி முழுவதையும் மீட்க அமெரிக்க போர் விமானங்கள் ISISகள் மீது நேற்று குண்டு மழை பொழிந்தன. அதில், ISISகளின் 16 ஆயுத வாகனங்கள் அழிக்கப்பட்டன. பல வாகனங்கள்…

Read More

யாழ். வருகிறார் ஜேர்மனிய தூதுவர்

இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர்  ஜூர்கன் மொர்காட் ஒரு நாள் விஜயமாக நாளை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.யாழிற்கு வரும் ஜேர்மன் தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட உயர் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. வடக்கின் அபிவிருத்தி குறித்தும் இங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் அவர் ஆராய்வார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

பேராதனை பல்கலையில் சுகாதார மாநாடு

சர்வதேச சுகாதாரத்துறை மாநாட்டினை முன்னிட்டு பேராதனை பல்கலைக்கழகத்தினால் ஒரு சுகாதாரம் எனும் தலைப்பிலான மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த சுகாதார மாநாடு ஒரே சுகாதாரம் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.சுகாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற புதிய தீர்வு முறைகள் மற்றும் சர்வதேச சுகாதார சமூகத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏற்படுகின்ற நன்மைகள்…

Read More

துஸ்பிரயோகத்தின் பின் யுவதி கொலை : வைத்தியருக்கு மரணதண்டனை

சமிளா திசாநாயக்காவின் மரணம் தொடர்பான கொலை வழக்கின் சந்தேகநபரான வைத்தியர் இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த யுவதியான சமிளா 2007 ஆம் ஆண்டு, சிகிச்சைக்காக கொள்ளுப்பிட்டி வைத்தியசாலைக்கு சென்றவேளை சந்தேக நபரான வைத்தியர் யுவதிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.அதன் பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து யுவதியை கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைதுசெய்யப்பட்டார்.அவருக்கு எதிரான வழக்கு, நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…

Read More

இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் புதிய சட்ட திருத்தம்

இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.

Read More

மீண்டும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்தது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு

அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பத்திரிகையாளரின் தலையை துண்டித்த காணொளியை ஐ.எஸ் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் திகதி அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் போலே  தலையை துண்டித்து கொலை செய்து வெளியிட்ட காணொளியில் அடுத்ததாக மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரான ஸ்டீவன் சாட்லாஃபை  கொலை செய்யப் போவதாக தெரிவித்திருந்தனர்.அதேபோல் தற்போது ஸ்டீவன் சாட்லாஃபை பத்திரிக்கையாளரை கொலை செய்து காணொளியை வெளியிட்டுள்ளனர். அதில்  காணொளியில் மண்டியிட்டு இருந்த ஸ்டீவன் கூறுகையில், ஒபாமா உங்களின் வெளியுறவுக் கொள்கை மூலம் ஈராக் விஷயத்தில்…

Read More

ஈராக் இராணுவத்தினரின் குடும்ப உறவினர்கள் பக்தாத்திலுள்ள பாராளுமன்றத்தை முற்றுகை!

ஈராக்கில் தாம் கைப்பற்றிய இராணுவ வீரர்களை ISIS குவியலாக நிறுத்தி சுட்டுக் கொலை செய்து வரும் நிலையில் இப்படுகொலைக்கு நியாயம் வேண்டி ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள அந்நாட்டுப் பராளுமன்றத்தை குறித்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுள்ளனர். மேலும் இதன் போது தமது அன்புக்குரியவர்களின் முடிவு என்ன ஆனது என்பது குறித்துத் தெரியப் படுத்துமாறு குறித்த உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர். கிறீன் ஷோன் எனும் சர்வதேச பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் ஈராக் பாராளுமன்றத்தை இராணுவ வீரர்களின் சுமார்…

Read More

சுவிஸில் நண்பியை கொலை செய்த இலங்கையருக்கு நியூஸிலாந்தில் விளக்கமறியல் நீடிப்பு

குறித்த இலங்கையர் இன்று ஒக்லேன்ட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். 42 வயதான இந்த இலங்கையர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் கைது செய்யப்பட்டார். முன்னாள் நண்பியான 23 வயதான கவிதா கந்தையா என்பவரை 2000 ஆம் ஆண்டு பாசெல் நகரில் வைத்து இந்த இலங்கையர் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர் சார்பில் இன்று பிணை மனு எவையும் தாக்கல் செய்யப்படவில்லை. குறித்த…

Read More

சோமாலியாவில் 43.000 குழந்தைகள் பசியால் இறக்கும் ஆபத்து

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தின் பேரழிவில் சிக்கி இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அதன்பின்னர் 2012-ம் ஆண்டில் சர்வதேச ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது போரினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டை சீரமைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. ஆனால் இஸ்லாமிய ஷெபாப் போராளிகளின் தொடர் தாக்குதல்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் தலைநகரின் உள்ளேயே நிலவும் பட்டினி நெருக்கடிகளும் அரசின் சாதனைக்கான தடையாகவே அறியப்படுகின்றது. இன்று வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கை ஒன்றில்…

Read More

யாழ் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவியின் நிகாப் விவகாரம் சுமூகமாக தீர்க்கப்படும் – உபவேந்தர் வசந்தி அரசரட்ணம்

(பாறூக் சிகான்) யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இனிவரும் காலங்களில் நிகாப் எனப்படும் இஸ்லாமிய ஆடை அணிவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீட  பீடாதிபதி எஸ்.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். மருத்துவ பீடத்திலுள்ள மருந்தகவியல் கற்கை நெறியினை தொடரும் முஸ்லீம் மாணவி ஒருவர் கடந்த கல்வியாண்டு இடம்பெற்ற பரீட்சை ஒன்றிற்கு நிகாப் அணிந்த நிலையில் தோற்றியிருந்தார்.இந்நிலையில் பரீட்சை மேற்பார்வையாளராக கடமையாற்றியவர் இனி வரும் காலங்களில் பரீட்சைக்கு வரும்போது நிகாப் அணிந்து வர வேண்டாம் என அறிவித்துள்ளார். இதனை அடுத்து…

Read More

சவூதி அரேபியாவில் போதைபொருள் விற்ற மூவரின் தலை வெட்டப்பட்டது

சவூதியில் போதைப் பொருள் விற்ற மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் தலைகளை வாளால் துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம், அரசு செய்தி நிறுவனமான எஸ்.பி.ஏ.வுக்கு செவ்வாய்க்கிழமை அளித்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள விவரம், சிரியாவைச் சேர்ந்த ஹமூத் ஹஸன், ஹஸன் முஸல்மானி, யூசுப் அல்ஹல்கி ஆகிய மூவரும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை ஏராளமான அளவில் வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் முடிவில் அவர்களுக்கு மரண…

Read More