Headlines

இளைஞரை தாக்கிய வாரியபொல யுவதி கைது!

குருநாகல் வாரியபொலவில் யுவதி ஒருவரால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த திலினி அமல்கா என்ற யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். வாரியாபொல பொலிஸ் நிலையத்திற்கு வாய்மொழி வழங்குவதற்காக வந்திருந்த சந்தர்ப்பத்தில் குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை வருகிறார்

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சிப் மார்ஷல் தாஹிர் ஹபீக் பட்  இலங்கைக்கு இன்று வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (OU)

Read More

இலங்கையில் தொழில்நுட்ப அறிவு 50 வீதமாக உயர்வு

இலங்கை மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு 50 வீதமாக உயர்வடைந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பல பிட்டிய தெரிவித்துள்ளார்.2005 இல் இலங்கை மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு 4 வீதமாக காணப்பட்டதாகவும் அது தற்போது 46 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (OU)

Read More

பொதுபலசேனாவின் அடுத்த நகர்வு – பெளத்த, இந்து தர்ம பாது­காப்புசபை உத­ய­ம்

இந்து ,பெளத்த மதங்­களை பாது­காப்­ப­தற்­கான பெளத்த, இந்து தர்ம பாது­காப்பு சபை நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் உத­ய­மா­னது. பொது­ப­ல­சே­னாவும் அகில இலங்கை இந்து சம்­மே­ள­னமும் இணைந்து இவ்­வ­மைப்பை உரு­வாக்­கி­யுள்­ளன.   இதற்­கான உடன்­பாடு பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கும் இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் அருண் காந்­துக்­கு­மி­டையே பௌத்த,இந்து ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்­டது.   இது தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்­பெற்­றது. இதன்­போது கருத்து தெரி­வித்த பொது­பல சேனாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே…

Read More

கதையாக்கச் செயற்றிட்டம் காலத்தின் தேவையாகும் – மேல்மாகாண கல்விப் பணிப்பளார், விமல் குணரத்ன

(எம்.ரீ.எம்.பாரிஸ்) ‘மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையை வெளிப்படுத்தி, அவர்களை சமூக மாற்றத்தின் முக்கிய பங்காளிகளாக மாற்றும் அரிய கலையே கதையாக்க வெளிப்பாடாகும். இளம் தலைமுறையினரிடம் காணப்படும் புரழ்வான நடத்தைக் கோலங்களை மாற்றி, அபிவிருத்திக்கான புத்தாக்கங்களை வெளிப்படுத்தும் இயலுமையை, கதை சொல்தல்கலை வளர்க்கின்றது. கற்றல் கற்பித்தலில் இக்கலை அதிக அவதானத்தைப் பெற்று வருகின்றது’ என மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்ன தெரிவித்தார். களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கபூர்வக் கருத்து வெளிப்பாடு மற்றும் கதைசொல்தல் தொடர்பான…

Read More

புல்மோட்டையில் பதற்றம் – அரிசிமலையில் 500 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு

திருகோணமலை, புல்மோட்டை, அரிசிமலைப் பகுதியில் 500 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த நில அளவீடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இதன்போது அபூபக்கர் (வயது 54) என்பவர் காயமடைந்து புல்மோட்டை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நில அளவை திணைக்களத்தால் பூஜாபூமி திட்டத்தின் கீழ் இந்த அளவை செய்யப்படவிருந்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து அரிசிமலைப் பகுதியில் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பொலிஸ் பாதுகாப்புடன் நேற்றுக்காலை 8.30 மணியளவில்…

Read More

தமிழ் மக்களைப் புறக்கணிக்கக் கூடாது – பாப்பரசர் பிரான்ஸிஸ்

(வத்திக்கான் இணையத்தளம்) அடுத்த வருடம் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ். தனது இலங்கை விஜயத்தின்போது பரிசுத்த பாப்பரசர் மடு தேவாலயத்துக்கும் விஜயம் செய்வார். இலங்கையில் 26 வருடங்களாக இடம்பெற்ற போர் பேரழிவை ஏற்படுத்தியிருந்து ஆழமான காயங்களை விட்டுச் சென்றுள்ளது. அப்படிப்பட்ட, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடம் ஒன்றுக்கு செல்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார். பரிசுத்த பாப்பரசரின் விஜயம் சில போக்குவரத்து பிரச்சினைகளை…

Read More

டுபாயில் இலங்கைப் பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல்

தமது பணி வழங்குநர் உரியமுறையில் சம்பளம் வழங்காமையால் அவருடைய தங்கநகைகளை திருடியமையை இலங்கை பணிப்பெண் ஒருவர் டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். பத்திரிகை விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் தமது வீட்டுக்கு பணியாளாக வந்த இலங்கை பெண், இரண்டொரு நாட்களில் தமது பெருமளவு நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக பணிவழங்குநர் பெண் மன்றில் முறையிட்டிருந்தார். எனினும் தாம் பணியில் இணைந்து நான்கு நாட்களாகியும் பணி வழங்குநர் உறுதியளித்தப்படி நாட் சம்பளத்தை வழங்காமை காரணமாக பழி தீர்க்கும் வகையில்…

Read More

பாராளுமன்றம் கலைக்கப் பட்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!:10 ரஷ்யத் துருப்புக்களைக் கைது செய்தது அரசு

திங்கட்கிழமை உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷெங்கோ அந்நாட்டுப் பாராளுமன்றத்தைக் கலைத்திருப்பதாகத் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் ஆக்டோபர் 26 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கெய் லவ்ரோவ் கூறுகையில் உக்ரைன் விவகாரத்தில் தேசிய இணக்கப் பாட்டைக் கொண்டு வரக் கூடிய எந்தவொரு முடிவிலும் ரஷ்யா பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் உக்ரைனுக்கு இவ்வாரம் 2 ஆவது மனிதாபிமான உதவித் தொடர் வாகன அணியை அனுப்பவும் ரஷ்யா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்….

Read More

பேஸ்புக்கில் அண்ணன் செய்த வேலையால் யாழில் அடிவாங்கிய தம்பி

கரம்பன் கிராமத்தை பற்றி ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்துள்ளார். இதனையடுத்து, யாழ். கரம்பனில் வசிக்கும் அவ்விளைஞனின் சகோதரன் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதான சகோதரன், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பியுள்ளார். இதேவேளை, தாக்குதல் நடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அதே இடத்தைச் சேர்ந்த இருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 24…

Read More

நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற 90நாள்!

நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 90 நாள் நிறைவடைகிறது. மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியுடன் நிழல் போல ஊழல் கரையும் படிந்து காலத்தோடு நகர்ந்து வந்தது என்பதை பலரும் மறுக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில், திட்டமிட்டு அயராது பிரச்சாரம் செய்து, காங்கிரசுக்கு எதிரான வாக்குகளை நரேந்திர மோடி அள்ளினார் என்பதையும் பலரும் மறுக்க மாட்டர்கள். இப்படிப்பட்ட சூழலில் ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து…

Read More

 8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கையெழுத்து இடப்பட்டது… அல்லாஹு அக்பர் ….

8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக வெற்றிகரமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.. இதில் குறிப்பிடப்படும்நடைமுறை படுத்தும் இடைகால ஒப்பந்தத்தத்தில் கைச்சாதிடப்பட்டுள்ளது. 1 -காஸா மீது யூதபயங்கரவாதிகளின்முற்றுகை முழுமையாக விளக்கப்படுவதற்க்கு ஒப்புதல். 2-சர்வதேச நாடுகளின்மேற்ப்பார்வைகளின் கீழ் காஸா புனரமைப்பு. 3- மின்சார பிரச்சினைகளை முழுவதுமாக காஸாவின் கட்டுப்பாட்டின் கீழ் வழங்குதல். 4- காஸாவுக்கான கடல் எல்லையில் இருந்து மீன் பிடித்தல்களை 96 மைல்களில் இருந்து அனுமதித்தல். 5- காஸாமீதான நிதி தடைகளை முற்று முழுதாக நீக்குதல்….

Read More