அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக அறிக்கை விட வேண்டாம்- றிப்கான் பதியுதீன் சாட்டை
சிவசக்தி ஆனந்தனுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் சாட்டை தர்மபுரத்தில் குடியிருக்கும் தமிழ் மக்களை அமைச்சர் றிஷாத் பதியுதீன் வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை ஆதாரமற்றதும் ஓர் அப்பட்டமான குற்றச்சாட்டும் ஆகும். வடக்கில் தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி உழைத்து வரும் அமைச்சர் றிஷாட்டின் பணிகளைப் பொறுக்கமாட்டாத இனவாத சக்திகள் அவர்மீது காழ்ப்புணர்வான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக தவறான…
