அமைச்சர் ரிசாத் காடளிப்பதாக கூறப்படும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன?
-கே.சி.எம்.அஸ்ஹர்- அமைச்சர் றிசாத் பதியுதீன் ,வடமாகாணத்தில் இருந்து 1990ல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த அம்மக்களின் மக்கள் பிரதிநிதி இம்மக்களின் அதிக வாக்குகளை பெற்றவர் இவரே,வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் 23 வருடங்களாகப் படுகின்ற அகதிவாழ்வையும் ,அவல வாழ்வையும் இவரைவிட அதிகம் அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. இவரின் ஒரே சிந்தனை தனது அரசியல் காலப்பகுதிக்குள் எப்படியாவது வஞ்சிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களைக் கௌரவமாக மீளக்குடியேற்றி விடவேண்டும் என்பதே ஆகும். பொதுசன முன்னணி அரசின் வெற்றிக்கும்,ஜனபதிபதியின் வெற்றிக்கும் இவரும்,இம்மக்களும் செய்தவை…
