வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க பெரும்பான்மை கள் சதி-கண்டிக்கிறார் அப்துல் பாரி
வடக்கில் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் அரசாங்கம் குடியேற்றுவதுடன்,அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று வவுனியா நகர சபை உறுப்பினரும்,வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவருமான அப்துல் பாரி கோறிக்கை விடுத்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினர்.கடந்த 22 வருட காலமாக அந்த மக்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் இடம் பெறவில்லை.இருந்த போதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்ட அபிவிருத்தி…
