Headlines

வற்வரி முறைமை அவசியம் வருமான அதிகரிப்பும் தேவை

அரசாங்கத்தின் முறையான வரிக்கொள்கை முறைமை மற்றும் நம்பகத்தன்மை என்பன அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத் தில் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது. தற்போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரி முறைமை அவசியமான தேவையாக காணப்படுகின்ற போதும் அது மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதை கருத்திற்கொண்டு வருமான அதிகரிப்புக்கு தேவையான ஆலோசனைகளையும், வரவுசெலவுத்திட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய உள்ளீடுகள் தொடர்பிலும் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு தலைவர்…

Read More

வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் வரி அதிகரிப்பு யோசனை சமர்ப்பிப்பு!

வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளது. வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை, எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்துடன் சமர்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 11 வீதமாகக் காணப்படும் வற் வரியை 15 வீதமாக உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.எனினும், உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தின் அடிப்படையில் அரசாங்கம் குறித்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது. அமைச்சரவையின் அனுமதியின்றி சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து புதிய வற்…

Read More

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரி 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, இதுவரை 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கு இப்போது ரூ.40 இற்கு உயர்வடைந்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டிலுள்ள விவசாயிகளின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வற்வரி தொடர்பில் பிரதமர் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை

வற்வரி தொடர்பாக தற்போது நிலவிவரும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஐ.தே.க. வின் அமைச்சர்கள், உப அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்துள்ளார்.

Read More

வெட் வரி ஒரு ரூபா கூட அதிகரிக்கப்பட மாட்டாது

எக்காரணத்திற்கொண்டும் வெட் வரி அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஏப்ரல் 01ஆம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட்ட வெட் வரி, மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த வெட் வரி அதிகரிப்பு மீண்டும் மே மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென்று நிதியமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் வெட் வரியை ஒரு ரூபா கூட அதிகரிக்க விடமாட்டேன்…

Read More

VAT நடைமுறைப்படுத்தப்படும் – நிதியமைச்சு

திருத்தம் செய்யப்பட்ட வற்வரி எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் 15 வீதமாக திருத்தம் செய்யப்பட்ட வற்வரியே எதிர்வரும் மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More