Headlines

ஞானசாரர் தலைமையில் இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “எழுக தமிழ்” பேரணிக்குக் கண்டனம் தெரிவித்தும் அதில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில், வவுனியா, மாமடு பிரதேசத்தில், இன்று வௌ்ளிக்கிழமை (30) காலை, ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. சிங்கள பௌத்த அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து, “ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு” என்ற பெயரில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கில், சிங்கள சமூகத்தைப் பாதுகாப்பது…

Read More

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு!

-மனாப் அஹமத் றிசாத் , அக்கரைப்பற்று – இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் குறு நில மன்னர்களாக வாழ்வதற்கு முஸ்லிங்களுக்கு என்ன தேவை இருக்கிறது. தற்காலிகமாக இரவோடிரவாக முஸ்லிங்களை பற்றி சிந்திக்காமல் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்பொழுது சட்டரீதியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இப்பொழுது கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் யாவரும் நலமாகத்தான் இருக்கிறார்கள். தமிழ் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபை முதல்வராகிய நீங்களும்; வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதன் நோக்கம்…

Read More

மீள்குடியேற்ற செயலணியை நிராகரிக்கும் யோக்கியதை விக்கிக்குக் கிடையாது

-சுஐப் எம்.காசிம்  – வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாத வடமாகாண சபைக்கு, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட விசேட செயலணியை நிராகரிக்கும் எந்த யோக்கியதையும் கிடையாது என்று யாழ் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவரும், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான பி.ஏ.சுபியான் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை பதவியேற்ற பின்னர், வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு எத்தனையோ தடவைகள் நாம் அவரிடம் கோரியபோதும் எந்த முயற்சியும்…

Read More

விக்னேஸ்வரனிடம் நலம் விசாரித்த அமைச்சர் றிஷாத்!

யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீன் வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேற்று (25) மாலை சந்தித்து நலன் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின்போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றுள்ளார். இதன்போது திடீர் சுகவீனமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த வடமாகாண முதலமைச்சரின் உடல் நலன் குறித்து றிஷாத் பதியுதீன் விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஹம்மது நபி (ஸல்) குறித்து, எடுத்துக்கூறிய விக்னேஸ்ரன்

அவசர உலகத்தில் திடீர் பணக்காரர்களாக வருவதற்கே விரும்புகின்றார்கள் இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (09) மன்னாரில் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப கட்டிடங்களை திறந்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீரிய வாழ்க்கைமுறை, ஒழுக்கம், வர்த்தகத்தின் உண்மைத்தன்மை, மார்க்கத்தின் வழிமுறை அனைத்தையுந் தொலைத்து விட்டு என்ன இழிதொழில் செய்தாவது திடீர் பணக்காரர்களாக மாறிவிட வேண்டும் என்ற துடிப்பில் பலர் இருக்கின்றார்கள். தமது பிள்ளைகளையே இழந்துவிடக் கூடிய போதைப் பொருள் கடத்தல்,…

Read More

ஒஸ்மானியா கல்லூரியில் எல்லே விளையாடிய சமந்தா பவர்

இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை சமந்தா பவர் திறந்து வைத்துள்ளார். இவ்விழாற்கு பிரதம அதிதிகளாக வருகை தந்திருந்த சமந்தா பவர் மற்றும் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளனர். இதன்போது, ஒஸ்மானிய கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் எல்லே விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

Read More