Headlines

அமெரிக்கா சென்ற ஐ.தே.க. உறுப்பினர்களின் அறிக்கையை கோரும் பிரதமர்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல்அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர்களின் அறிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். இவர்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி பெற்ற விதம் தொடர்பான அறிக்கையினையும்பிரதமர் பாராளுமன்ற அலுவலகத்திடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமெரிக்க சுற்றுலாவில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்களின் அவசியம் என்ன என்றும், அவர்கள் அமெரிக்காவில்முன்னெடுத்த அரசியல் விவகாரங்களையும் குறித்த அறிக்கையில் உள்ளடக்குமாறுபிரதமர் கோரியுள்ளார்.

Read More

தேசிய இனப்பிரச்சினைக்கு 70 ஆண்டுகாலமாக தீர்வில்லை – ஐ.தே.க.மேடையில் ஜனாதிபதி

தேசிய இனப்பிரச்சினைக்கு 70 அண்டுகாலமாக தீர்வு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு சம்மேளனம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று (10) இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கடந்த 70 ஆண்டுகாலமாக கடந்த அரசாங்கங்கள் தோல்வியுற்றுள்ளன. கடந்த காலத்தில் இருந்த…

Read More

ஐ.தே.கவின் ஆண்டு விழாவில், தமிழும் தேசிய கீதம் பாடப்பட்டது

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா, கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவின் ஆரம்பத்தில்  சிங்கள மொழியில் தேசிய கீதமும், இறுதியில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

Read More

பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ; சாரதிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தெமட்டக்கொட மேம்பாலத்திலிருந்து பொரளை சந்திவரை பாதை மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை ஆண்டு நிறைவு விழா இடம்பெறும்  கெம்பல் பார்க் மைதானத்திற்கு செல்லும் புஞ்சி பொரளை மற்றும் ஓவல் மைதானத்திற்கு அருகிலுள்ள வீதிகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதிகள் ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா நிறைவுபெறும் வரை குறித்த…

Read More

ஐ.தே.க. மேடையில் ஜனாதிபதி மைத்திரி, சந்திரிகா

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டுள்ளார். இவர் சற்றுமுன்னர் கெம்பல் பாரக் மைதானத்திற்கு வருகைத்தந்துள்ளதுடன், அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார். இந்நிலையில் குறித்த ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை  கொழும்பு கம்பெல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது . அனைத்து தேர்தல் தொகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ஐhதிக சேவக ஊழியர்கள் சங்கம் மகா நாடு தொடர்பாக தெரிவிக்கையில் 30ற்கும் மேற்பட்ட தொழிற்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மகா நாட்டில கலந்து கொள்ள உள்ள விருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு…

Read More

ஐ.தே.க.வுக்கு 70 ஆண்டுகள் பூர்த்தி!

ஐக்கிய தேசியக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் எழுபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கடந்த 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. இந்த நாட்டின் முதல் பிரதமரான டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையில் ஐக்கிய தேசியக் கட்சியானது மிதவாத கொள்கைகளைப் பின் பற்றி பல தடவைகள் நாட்டின் ஆட்சியை முன்னெடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திலும் பிரதான பங்காளிக்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி திகழ்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு…

Read More

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 70 ஆண்டுகள்!

1946ம் ஆண்டு செப்டம்பர் 06ம் திகதி முன்னாள் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கியிருந்தார். அன்றைய அரசியல் மற்றும் நாட்டின் சுதந்திரத்துக்கான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட இலங்கை தேசிய காங்கிரஸ் மற்றும் சிங்கள மகா சபை என்பன இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கியிருந்தன. இலங்கை தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்திய சேனநாயக்க தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியில் நிலைத்திருக்க, சிங்கள மகாசபையின் தலைவர் பண்டாரநாயக்க பின்னாளில் இக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று சுதந்திரக் கட்சியை உருவாக்கியிருந்தார். இந்நிலையில்…

Read More

ஐ.தே.க 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு: வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்குமாறு வெளிநாட்டு தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. கொழும்பு கெம்பல் மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உள்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு இராஜதந்திரிகள் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என…

Read More

ஜனாதிபதி தலைமையில் ஐ.தே.கவின் 70ம் ஆண்டு நிறைவு விழா

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழாவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்க உள்ளார். எதிர்வரும் செப்டம்பர்மாதம் 10ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உறுப்பினர்களினால் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது. பொரளை கெம்பல் மைதானத்தில் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஐக்கியதேசியக் கட்சியின் 69ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தமை…

Read More