Headlines

இரண்டு சிறுவர்களை காணவில்லை ; தேடுதல் பணிகள் தீவிரம்

திருகோணமலை உப்புவெளி பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சிறுவர்கள் நேற்று (12) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போயுள்ள சிறுவர்கள் 9 மற்றும் 11 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவர்களை தேடும் பணிகளில் 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

திருகோணமலையில் யுத்த ஆயுதங்கள் மீட்பு!

திருகோணமலை கிண்ணியா உப்புவெளி பிரதேச காட்டுப் பகுதியில் யுத்த ஆயுதங்கள் சிலதை இன்று (18) காலை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் மற்றும் மிதி வெடிகள் என்பனவே மீட்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு குறித்த ஆயுதங்களை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

திருமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு!

திருகோணமலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யுவுள்ள இப்தார் நிகழ்வுகள் எதிர்வரும் 29 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Read More

முன்பள்ளி மாணவர்களின் கல்வியில் கூடுதல் கரிசனை வேண்டும்!

-திருமலை அரசாங்க அதிபர் தெரிவிப்பு- 2015 ஆம் ஆண்டு முன்பள்ளி மாணவர்களுக்கு தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று (8) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது. முன்பள்ளி மாணவர்களின் கல்வி தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுவதாகவும் முன்பள்ளி ஆசிரியைகள் முன்பள்ளி தொடர்பான டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்வது இன்றிமையாயதது என்றும் நாட்டின்…

Read More

பாண்துண்டு தொண்டையில் சிக்கியதில் இளம் தாய் மரணம்

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலைப் பகுதிக்கு சுற்றுலா வந்த இளம் தாயொருவர் சாப்பிடும்போது பாண் துண்டொன்று தொண்டைக்குள் சிக்கி பரிதாபகரமாக மரணமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். மிஹிந்தலை திருகோணமலை பிரதான வீதியின் மஹகனந்தராவ குளத்தினருகே இருந்த கடையொன்றில் காலை உணவாக பாணும் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாண் துண்டொன்று தொண்டைக்குள் சிக்கியதால் அவதியுற்றுள்ளார். இதனை அறிந்து கொண்ட இவரது கணவர் உடன் பாதிக்கப்பட்ட தனது மனைவியை மிஹிந்தலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற போதும் பாதிக்கப்பட்ட இளம் தாயை…

Read More

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக மஹ்றூப் MP நியமனம்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். மஹ்றூப் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் அயராத முயற்சியினாலேயே ஏ.எம்.மஹ்றூப் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் ரிசாத் பதியுதீனால் இன்று புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசியக்…

Read More