Headlines

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக ஏழு விமானங்கள்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக ஏழு விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவை கடந்த சில வருடங்களாக நட்டத்தில் இயங்கி வருகின்றது. இதன் காரணமாக அண்மையில் இந்த விமான சேவைக்குச் சொந்தமான நான்கு விமானங்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மேலும் ஏழு விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பு, தொட்டலங்க…

Read More

விமான நிலைய, சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைதுவிமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான  வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tm

Read More

ஸ்ரீலங்கன் விமான சேவை : 17, 18 ஆம் திகதிகளில் பாராளுமன்றில் விவாதம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் கடந்த ஆட்சிக் காலத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்பாக 17, 18 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதமொன்று நடைபெறும். நிறுவனத்தின் தற்போதைய கடன் காரணமாக அதை கூட்டிணைந்த நிறுவனமாக மாற்ற அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

Read More

எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம்: அரசாங்கம்

– எம்.எம்.மின்ஹாஜ் – ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை தரமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே வழங்குவோம். எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம். இது தொடர்பில் ஆலோசனை சபையே தீர்மானிக்கும் என்று  மின்சக்தி மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார். இரு விமான சேவைகளின் கடன் மற்றும் நஷ்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாவார்.  தனது சுய நலனுக்காகவே அவர் குறித்த நிறுவனங்களை அரச…

Read More

ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் தனியார் நிறுவனத்துடன் இணைய அமைச்சரவை அங்கீகாரம்!

ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைத்துஎதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விசேடதிட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கருத்துதெரிவிக்கும் போதே சரத் அமுனுகம இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரில் திடீர் சோதனை

யு.எல்.309 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்­த­மான விமானம் நேற்­று­முன்­தினம் சிங்­கப்பூர் விமான நிலை­யத்தில் இருந்து புறப்­பட்டு சற்று நேரத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டது. விமான நிலைய பாது­காப்பு அதி­கா­ரிகள் வழங்­கிய பாது­காப்பு தொடர்­பான எச்­ச­ரிக்கை அறி­விப்பை அடுத்தே விமானம் தரை­யி­றக்­கப்­பட்­டது. விமானம் தரை­யி­றக்­கப்­பட்ட பின்னர்இ சில பய­ணி­க­ளிடம் சிங்­கப்பூர் பொலி­ஸாரும்இ விமான நிலைய பாது­காப்பு அதி­கா­ரி­களும் விரி­வான விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்­ளனர். இவர்­களில் 5 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறு­வனம் கூறி­யுள்­ளது….

Read More

விமானமொன்று மத்தளையில் தரையிறக்கம்

குவைத்தில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரென மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. யு.எல்.230 ரக விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடும் மூடுபனி காரணமாகவே குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Read More