மோடிக்கு தைரியம் இல்லை! – அரவிந்த் கெஜ்ரிவால்
ஹெலிகொப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கைது செய்யும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹெலிகொப்டர் ஊழலை முன்வைத்து டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சோனியா காந்திக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்று கெஜ்ரிவால் பேசியதாவது: ஹெலிகொப்டர் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை காப்பாற்ற பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் விவகாரம்…
