பீ.ஜே. விவகாரம், ACJU கடிதத்தில் ஒரு ஊழியர் கையொப்பமிட்டது ஏன்..?
தென்னிந்திய தவ்ஹீத் புரட்சியாளர் பீ ஜே இலங்கை வருவதில் இலங்கை முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜமிய்யத்துல் உலமாவின் கடித தலைப்பில் மௌலவி அல்லாத ஒரு ஊழியர் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டிருப்பது உலமாக்களை அவமானப்படுத்தும் செயல் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. மேற்படி அறிக்கையில் ஜமிய்யத்துல் உலமாவின் நிர்வாகத்தில் சம்பளத்துக்கு பணி புரியும் ஆதம் அலி என்பவர் கையொப்பமிட்டுள்ளார். மிக முக்கியமான இந்த விடயத்தில் உலமா சபையின் தலைவரோ, செயலாளரோ, பத்வாக்குழுவோ அல்லது ஒரு மௌலவியாவது…
