Headlines

இலங்கை போக்குவரத்து சபை தனியார்மயப்படுத்தப்படமாட்டாது.

இலங்கை போக்குவரத்துச் சபையை எந்தவகையிலும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபயசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில இன்று(8) பாராளுமன்றத்தில் வாய்மொழி மூலம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு  அமைச்சர் பதில் அளிக்கையிலேயே இந்;;த விடயத்தை குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்து சேவை தேசிய சொத்தாகும் இதனால் எந்தவகையிலும் தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Read More

சுயவிருப்பின் கீழ் ஓய்வு பெற ஆர்வம் காட்டும் அரச பணியாளர்கள்!

இலங்கை போக்குவரத்து சபையில் பணி புரியும் 3400 ஊழியர்கள் சுயவிருப்பின் கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஓய்வு வழங்கும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஸ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 1,077 பேருக்கு ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் பணியில் இருந்து விலகும் போது மொத்தமாக ரூபா 1.2 மில்லியனில் இருந்து ரூபா 3 மில்லியன் வரையில் அவர்களின் ஓய்வூதியத் தொகையும் நல்லெண்ணத்தொகையும்…

Read More

1000 பஸ்களை திருத்துவதற்கு 3000 மில்லியன் ரூபா

போக்குவரத்துக்கு உதவும் நிலையற்ற ஆயிரம் பஸ்களை மீள் திருத்தம் செய்து போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு அதிக பழமையான பஸ்களை இவ்வாறு திருத்தம் செய்ய உள்ளதாக அந்த சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பீ.கே. ஆரியரத்ன கூறினார். இதற்காக 3000 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீள் திருத்தம் செய்தும் பயன்படுத்த முடியாத நிலையில் மேலும் 500 பஸ்கள் காணப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

Read More

ஆகஸ்ட் முதல் இ.போ.ச பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களுக்கான கட்டணங்களை ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி பஸ் கட்டணங்கள் நூற்றுக்கு 6 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், குறைந்த கட்டணமாக 9 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளமையாலே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக,கண்டி – குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே கூறியுள்ளார்.

Read More

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், பஸ் கட்டணம் இல்லை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை இலவசமாக வழங்குவதற்கு தயார் என்று இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைப்படி இச்சேவை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களின் வேண்டுகோள்படி உரிய டிப்போக்களின் ஊடாக போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ராமல் சிறிவர்தன கூறினார். இதற்கிடையில் உடரட்ட மார்க்கத்தில் ரம்புக்கனையில் இருந்து கண்டி…

Read More

அடைமழையினால் இலங்கை போக்குவரத்து சபைக்கும் நட்டம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையினால் 7 கோடிக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ராஜா குணதிலக கூறியுள்ளார். இதேவேளை, அனர்த்த நிலைமைகளினால் பணியாளர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளமையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மோசடி செய்யும் ஊழி­யர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை.!

இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபைக்குச் சொந்­த­மான பணத்­தினை மோசடி செய்யும் ஊழி­யர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார். அநு­ரா­த­புரம் சி.டி.சி. வர­வேற்பு மண்­ட­பத்தில் போக்­கு­வ­ரத்துச் சபை ஊழி­யர்­க­ளு­ட­னான சந்­திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

Read More