Headlines

பாலியல் தொழிலில் ஈடுபட்டால்: கைதுசெய்வோம்

பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வாழ்வாதாரம் கிடையாது என்பதனால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறி அண்மையில் சில பெண்கள் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். எனினும் இலங்கையின் சட்டங்களின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபட முடியாது. பாலியல் தொழிலில் ஈடுபடுதல் மற்றும் பாலியல் தொழில் மையங்களை நடாத்துதல் சட்டத்திற்கு விரோதமானது. எனவே, பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர். வாழ வழியில்லை இதனால்…

Read More

சந்தேக நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியில்லை: பொலிஸ் மா அதிபர்

சந்தேக நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியில்லை என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ஏதேனும் ஓர் குற்றச் செயல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர் ஒருவரை தாக்கி சித்திரவதைக்கு உட்படுத்தி தகவல்களைப் பெற்றுக் கொள்ள எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் சட்டத்தில் இடமில்லை. சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் விஞ்ஞான ரீதியான காரணிகளின் அடிப்படையிலான சாட்சியங்களையும் பயன்படுத்தி விசாரணை நடத்தப்பட முடியும். சந்தேக நபர்…

Read More

பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிமொருவர் மரணம்

அப்துல்லாஹ்: பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற லொறிமீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் செவ்வாய் அதிகாலை 2.10 மணியளவில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள மஹாஓயா – அரந்தலாவையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மஹாஓயா வீதியில் நள்ளிரவில் பயணித்துக் கொண்டிருந்த லொறியை சோதனைக்காக நிறுத்துமாறு மங்களம பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். எனினும், பொலிஸாரின் உத்தரவை மீறி லொறி அதிவேகத்துடன் பொலிஸ் சாவடியைக் கடந்து…

Read More

பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்: வாழைச்சேனையில் சம்பவம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்டகாலமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் அடங்கிய குழுவினரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று (22) காலை 11.00 மணியளவில் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை, மீறாவேடை, கிண்ணயடி, மாஞ்சோலை, கறுவாக்கேணி போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்று வந்ததையடுத்து வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானகேயின் ஆலோசனையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.திப்புட்டுமுனயின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி…

Read More