தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம்
கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம், 2015 /11 /27 கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா பாடசாலையில் நேற்று இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், மரிக்கார், இஷாக்…
