Headlines

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இரு அமைச்சர்களும் அதிரடி மறுப்பு

24.11.216 கௌரவ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள், அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இன விரோத செயல்களை எதிர்த்தும், அதனைக் கண்டித்தும் பேசியதோடு; 1000 வருடங்களுக்கு மேலான சிங்கள – முஸ்லிம் நட்புறவுக்கு பங்கம் விளைவிக்க இடம்கொடுக்க முடியாதென்றும், சகல விதமான தீவிரவாதங்களை கண்டித்தும், சிங்கள – முஸ்லிம் இன நல்லுறவு உறுதியான முறையில் கட்டி எழுப்பப்பட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தில் துணிந்து உண்மைகளை எடுத்துக் கூறி உரையாற்றியமைக்கு முஸ்லிம்கள் சார்பாக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்…

Read More

முஸ்லிம் தனியார் சட்டமும்; பிறர் தலையீடும்; உரிமைப் போராட்டமும்!

03.11.2016 இலங்கையில், “முஸ்லிம் தனியார் சட்டம்” என்று  டச்சுக்காரர்கள் காலத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் ஆங்கிலேயர் காலத்தில் 1806 ஆம் ஆண்டு அது சட்டக் கோவையாக அமுல்படுத்தப்பட்டது. அதன்பின், சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் மார்க்க மற்றும் அரசியல் அறிஞர்களை கொண்ட சபை மூலம் பரிந்துக்கப்பட்டு 1954  ஆம் ஆண்டு வலுவூட்டப்பட்ட சட்டமாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எனவே, “முஸ்லிம் தனியார் சட்டம்” என்பது எமது முன்னோர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட உரிமைகளில் ஒன்றாகும்….

Read More

அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் மரணம் குறித்த அனுதாபச் செய்தி

01.11.2016 அகில இலங்கை ஜமிய்யதுல் உலாமா சபையின் பிரதித் தலைவரும் ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் அகால மரணம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமான என்னையும் எமது கட்சியின் உறுப்பினர்களையும் பெரும் வருத்தத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக இலங்கை திரு நாட்டிலே தஃவா பணியில் தன்னை அர்பணித்த அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் பின்னால் நின்று அவரின் தஃவா விருட்சத்தின் வேராக  இருந்து பெரும்…

Read More