Headlines

கிரிக்கெட் போட்டியால் அதிக லாபம் ஈட்டிய இலங்கை

அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிக இலாபம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, அவுஸ்ரேலிய சுற்றுலா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டிக்கான அனுமதி சீட்டுக்கள் விற்பனையிலேயே 2,826,150 ரூபாய் பணம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டி ஒன்றுக்காக…

Read More

கோரிக்கையை வாபஸ் பெற்றார் நிசாந்த

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிசாந்த ரணதுங்க ஜக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்வதற்காக கொழும்பு மேல் நிதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவரின் சட்டத்தரணியால் இன்று (10) வாபஸ் பெற்றுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை குறித்த அனுமதியை பெற்றுத்தருமாறு இவர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் நிசாந்த ரணதுங்கவிடம் கடவத்தை நீதவான் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்றுவரும்…

Read More

மத்திய வங்கியின் புதிய ஆளுநருக்கு வாழ்த்து

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. நாட்டின் பணவியல் ஆணையம் புதிய ஆளுநரின் நியமனத்தின் பின் பொதுநம்பிக்கையை மீட்க உதவுவதுடன் அவரது 6 ஆண்டு சேவைக்காலத்தில் இலங்கை வர்த்தக சம்மேளனம் அவரது முழு ஆதரவையும் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை,  நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உறுதிப்பாடு, சுபீட்சம் நோக்கிய புதிய மத்திய வங்கியின் ஆளுநரின்  முயற்சிக்கு  அனைத்து பங்குதாரர்களும் அதரவு வழங்க வேண்டுமென இலங்கை வர்த்தக சம்மேளனம்…

Read More

இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இநத நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இந்நிலையில் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (2) காலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

Read More

தவறு செய்தவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை!- பிரதமர்

தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய வங்கி ஆளுநர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளைகோப் குழு முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டால்அவர் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தேசிய தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றைய தினம் (29) வழங்கிய நேர் காணலிலே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின்…

Read More

மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர்

மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை இன்னும் சில மணிநேரத்தில் நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பதுளையில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மத்திய வங்கியின் ஆளுநரான அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம், நாளை 30ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

சட்ட மா அதிபரின் ஆலோசனையிலே மத்திய வங்கி செயற்பட முடியும்

அரச வர்த்தகம் தொடர்பான பாராளுமன்ற குழுவுக்கு தகவல்களை வழங்க மத்திய வங்கி மறுப்புத் தெரிவித்தது என வெளியாகிய செய்திகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அது உண்மைக்குப் புறம்பான செய்தி என அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று(14) விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய வங்கியின் மூலம் அரச வர்த்தகம் தொடர்பான பாராளுமன்ற குழுவுக்கு தகவல்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனும் அடிப்படையில் கடந்த தினங்களில் ஊடகங்களில் வெளியான…

Read More

கிரிக்கெட் தேர்தலில் பிரதித் தலைவர் பதவிக்கு அர்ஜுண

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க கிரிக்கெட் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கிரிக்கெட் சபையின் பிரதித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காகவே அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கிரிக்கெட் தேர்தல் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதோடு அமைச்சர் அர்ஜுண ரணதுங்க வேட்புமனு தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் முன்னாள் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உபாலி தர்மதாஸவும் கலந்துகொண்டுள்ளார். தலைமைத்துவதற்கு போட்டியிடுமாறு அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அதனை…

Read More