அமீரலியின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த அரசாங்க அதிபர்
– அபூ செய்னப் – கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வந்த முறையற்ற விதத்தில் ஆற்றுமண் அகழ்வு மற்றும் கிரவல் அகழ்வினால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர் பொதுமக்களின் தேவைகளுக்காகவும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் தேவையான மண்ணை பெற்றுக் கொள்வதில் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் அபிவிருத்தி குழுக்களும் பெரும்பாலும் அதிக தொகை பணத்தை முகவர்களுக்கு கொடுத்தே தமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்தது இதற்கான அடிப்படைக்காரணம் அனுமதிப்பத்திரங்கள் வைத்திருக்கும் மணல் அகழும் முகவர்கள் அதிக…
