Headlines

தகவலறியும் ஆணைக்குழு அமைக்க தீர்மானம்

தகவலறியும் உரிமை சம்பந்தமான ஆணைக்குழுக்கு உறுப்பினர்களை நியமித்து அதை ஆணைக்குழுவாக ஸ்தாபிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடிய அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் போது சுயாதீன ஆணைக்குழுக்களின் தற்போதைய நிலமைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளது. அத்துடன் தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பாக அரசியலமைப்பு பேரவை தீவிரமாக பேசப்பட்டுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அரச நிர்வாக…

Read More

தகவல் அறியும் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்திட்டார்

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கையெழுத்திட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டமூலமானது அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த யூன் மாதம் 24 ஆம் திகதி தகவலறியும் சட்டமூலம் சில திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய அச்சட்ட மூலத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க தஸாநாயக்க, பிரதி பொதுச் செயலாளர் நீல் இட்டவெல ஆகியோரும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.

Read More

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு!

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கொன்று நாளை 27 ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் நடைபெறவுள்ள இச் செயலமர்வில் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான மற்றும் அமைச்சின் செயலாளர் நிமல் போபகே ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர். இலங்கை வாழ் மக்களின் தகவல் அறியும் உரிமையை பலப்படுத்தும் நோக்கில் தற்போதய அரசாங்கத்தின் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட தகவல்…

Read More

தகவலறியும் சட்டமூலம் 23 இல் பாராளுமன்றில் நிறைவேற்றப்படும்

தகவலறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். குறித்த சட்டமூலம் இம்மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமென அவர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

தகவல் அறியும் சட்டமூலம் 21 ஆம் திகதி நிறைவேற்றப்படும்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெற்று நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(08) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்

Read More

தகவல் அறியும் உரிமை! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கருத்தரங்கு

தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு ஒன்றை நடாத்த பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது. இந்த கருத்தரங்கு கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கருத்தரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புரிதலையும் அறிவையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில்…

Read More

தகவலறியும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விரைவில்!

விரைவில் பாராளுமன்றில் தகவல் அறியும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது என்று  பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத் துறை பிரதி அமைச்சர்  கருணாரத்ன பரணவித்தார தெரிவித்தார். நேற்று முன்தினம்  (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பின்னர் குறித்த சட்ட மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அச்சட்ட மூலத்தில் கவனம் செலுத்தக்கூடிய…

Read More

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு 2/3 பெரும்பான்மை அவசியம்

தகவல் அறியும் உரிமைக்கான சட்ட மூலத்தின் ஐந்து வசனங்கள் அரசியலமைப்பை மீறுவதாக காணப்படுவதால் அதனை திருத்தங்களின்றி நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைக்கான சட்ட மூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை தொடர்பான மனுக்கள் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ள தீர்மானத்திலேயே உயர் நீதிமன்றம் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளது. நேற்று(03) செவ்வாய்கிழமை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் கூடியது….

Read More

தகவல் அறியும் சட்டமூலம் இம் மாதம் சமர்ப்பிப்பு

தகவல் அறியும்  சட்ட மூலம்  இந்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறியும் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குறித்த  சட்டமூலம்  பூர்த்தியாக்கப்பட்டு, மாகாணசபைகளிடம் கருத்து கோரப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை,குறித்த சட்டமூலம்  அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், விவாதம் பற்றிய…

Read More