Headlines

ஐ.நா அலுவலகத்தின் முன்பு இராவண பலய ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து இராவண பலய அமைப்பு ஒரு மோசமான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது. கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்பு இன்று (1) காலை குறித்த ஆர்ப்பாட்டத்தை இராவண பலய அமைப்பின் பிக்குகள் முன்னெடுத்திருந்தார்கள். இதன்போது பான் கீ மூன் தமிழ் மக்களுக்கு சார்பானவர் என்றும், சிங்கள மக்களை கணக்கில் கொள்வதில்லை என்றும் பலத்த கோஷங்களை எழுப்பினார்கள். ஐ.நாவின் முன்றலில் ஒன்று கூடிய இவர்கள், பான் கீ முனுக்கு…

Read More

இனவாதிகளிடம் சிக்கிய முஸ்லிம் பாடசாலை!

– இக்பால் அலி – இனவாத ஆதிக்கம் நல்லாட்சியிலும் நிறுவனமய ப்படுத்த ப்பட்டுள்ளது என்பதற்கு ஹிரியுல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட மும்மன்ன முஸ்லிம் வித்தியாலயத்தின் விளையாட்;டு மைதானப் பிரச்சினை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பள்ளிக் கூட மாணவர்களின்  விளையாட்டு மைதானம் என்று கூட கருணை காட்ட வில்லை.  பாடசாலை மைதானத்தை பொது விளையாட்டு மைதானமாக பயன்படுத்தக் கோரி இனவாதிகள் மிக நுணுக்கமாகவும் நுட்பமாகவும் திட்டமிட்டு இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதேவேளை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக…

Read More

நாட்டில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கவில்லை

-எம்.ஆர்.எம்.வஸீம் – நாடு செல்லும் வீழ்ச்சிப்பாதையை தடுப்பதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இடம்பெறாமல் நாட்டுக்கு பொருத்தமற்ற மாற்றங்களே இடம்பெறுகின்றன. என ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த தேரர் தெரிவித்தார். தாய்நாடு எங்கள் அமைப்பு கொழும்பில் இன்று (15) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 30 வருட யுத்தத்தில் நாங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டோம். தற்போது யுத்தம் முடிவடைந்து நாட்டை அபிவிருத்தி…

Read More

வாக்குமூலம் வழங்க வந்தார் சத்தாதிஸ்ஸ தேரர்

சொந்த தேவைகளுக்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் 7 அரச வாகனங்களை பெற்றுகொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ராவனா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று (13) காலை வருகை தந்துள்ளார்.

Read More

பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகியன கூட்டணி அமைப்பு

சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட மூன்று அமைப்புக்கள் இவ்வாறு கூட்டணி அமைத்துள்ளன. பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகிய மூன்று அமைப்புக்களும் நேற்று இந்த கூட்டணியை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்தர்களின் உரிமைக்காக விரிவான அடிப்படையில் குரல் கொடுப்பதே இந்த கூட்டணியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த அமைப்புக்கள் கூட்டாக இணைந்து செயற்பட…

Read More

‘சிங்க லே’அமைப்பைத் தடை செய்யுமாறு கோரிக்கை

‘சிங்க லே’ அமைப்பினை தடை செய்யுமாறு அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் உடனான சந்திப்பின் போதே சமன் ரத்னப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘சிங்க லே’ , ‘தமிழே’ அல்லது ‘முஸ்லிம் லே’ போன்ற எந்தவொரு இனவாத அமைப்புக்களும் அவசியமில்லை. 71ஆம் மற்றும் 81ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு இரத்த ஆறுகள் ஓடியதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக போர் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில் இனியும்…

Read More

ராவணா பலய எச்சரிக்கை!

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்தால், ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைப்போம் என ராவணா பலய அமைப்பின் அழைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் நேற்று தெரிவித்துள்ளார். சுமார் மூவாயிரம் பௌத்த பிக்குகள் ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன் தலைமயிலான பிரதிநிதிகளுடன் ராவனா பலய நேற்று (30) சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது. இந்த சந்திப்பின்போது, சத்தாதிஸ்ஸ தேரர் குறித்த எச்சரிக்கையை…

Read More

ராவணா பலயவுக்கு ஆதரவளித்தால் நல்லாட்சி கவிழும்

மஹிந்த ராஜபக்ஷ அரசு பொதுபல சேனா என்ற பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொ டுத்து அரவணைத்தது. அதன் விளைவை இன்று ராஜபக்ஷ அனுபவிக்கின்றார். இன்று ராவண பலய என்ற பாம்பு படம் எடுத்து ஆட முற்படுகின்றது. இவ் நல் லாட்சியில் ராவண பலய எனும் பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொடுத்து அரவணைக்க முற்பட் டால் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் நிச்சயம் கவிழ்க்கப்படும்…

Read More

இலங்கையிலுள்ள தமிழ் பெயர்கள் அகற்றப்படும்: இராவணாபலய ஆவேசம் (2ம் இணைப்பு)

யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் ஊர்களின் பெயர்களையும் தாம் அகற்றுவதாக இராவணாபலய அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்கும் வகையில் இராவணாபலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு இன்று சென்றிருந்தது. எனினும், ஜனாதிபதியை இன்று சந்திக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் இராவணாபலய அமைப்புக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து…

Read More

அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்த்து இராவணா பலய ஆர்ப்பாட்டம்

– அலுவலக செய்தியாளர் –  அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராவணாபலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ள இராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள், ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகள் என கூறப்படுவோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், அவர்களை விடுதலை செய்வது தவறு எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலி அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதன்…

Read More