Headlines

மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது!

தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்க அநீதி இழைக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read More

உயர்தர பரீட்சை எழுத புதிய வாய்ப்பு

எதிர்வரும் வருடத்திலிருந்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அமரவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர பரீட்சையிலும் அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை அமைச்சினால் நேற்று (11)கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விழாவில் கலந்து கொண்ட போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய நூல்களை பாடசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் வினாத் தாள்களின் மாதிரி வினாக்கள் அடங்கிய நூலொன்றை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த நூலினை வலயக் கல்வி பணிமனைகளினூடாகா எதிர்வரும் வாரத்திற்குள் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மாணவர்கள் தங்களின் பரீட்சைகளில் முகங்கொடுக்க மிகவும் இலகுவாக இருக்கும் எனவும் சிறந்த பயிற்சியாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read More

சா/த பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

வ்வாண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சைப் பரீட்சை விண்ணப்பத் திகதி, எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை முடக்கிவிடக் கூடாது. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பின்னரும் அனைத்து மாணவ மாணவியரும் பாடசாலையில் தொடர்ந்தும்…

Read More

கா.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப் திகதி முடிவு மே 31

இவ் வருடத்திற்கான கா.பொ.த. சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த. சாதாரண தர  பரீட்சை டிசம்பர் மாதம்   6 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து பாடசாலை மற்றும் தனியார் பரீட்சாத்திகளினதும் விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி இம் மாதம் 28…

Read More

ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியவர் கைது

கண்டியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை சமர்ப்பித்தல், போலிப் பெயரில் பரீட்சை எழுதியமை, மோசடியில் ஈடுபட்டமை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட குறித்த நபரை,  கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உண்மையான பெயரைக் கொண்ட பரீட்சாத்தியையும் விசாரணைக்குட்படுத்த…

Read More

2ம் திகதி முதல் கா.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு தடை!

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செமினார், மாதிரி வினாப் பத்திரங்களை அச்சிடல் மற்றும் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 2ம் திகதி முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 2ம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 17ம் திகதி வரை இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு டிசம்பர் 17ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

க.பொ.த. (சா/த) பரீட்சை 664,537 பேர் விண்ணப்பம்

எதிர்­வரும் டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள கல்விப் பொதுத் ­த­ரா­தர (சாதா­ரண தரப்) பரீட்­சைக்கு ஆறு இலட்­சத்து 64 ஆயிரத்து 537 மாணவர்கள் தோற்­ற­வுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் டபிள்யூ.எம்.ஜே.புஸ்­ப­கு­மார தெரி­வித்தார். இவர்களுள் நான்கு இலட்­சத்து 3 ஆயிரத்து 442 பேர் பாட­சாலை விண்­ணப்­ப­தா­ரிகள் எனவும் இரண்டு இலட்­சத்து 60 ஆயிரத்து 895 பேர் தனியார் பரீட்­சார்த்­திகள் எனவும் பரீட்­சைகள் ஆணை­யாளர் மேலும் தெரி­வித்தார். இம்­முறை 4,670 பரீட்சை மத்­திய நிலை­யங்களை அமைக்க எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ள­தோடு கடந்த வருடம்…

Read More