Headlines

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தலைமையிலான நீதியரசர்கள்  குழு, இன்று அனுமதியளித்துள்ளது. இலஞ்ச, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அவர் சமுகமளிக்காமையினால், ஆணைக்குழுவை அவமதித்ததாக உயர் நீதிமன்றத்தில், ஜூன் மாதம் 30ஆம் திகதி மனுத்…

Read More

துமிந்தவை சிறையில் சந்தித்த நாமல்!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை நாமல் வெலிக்கடை சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியின் அலுவலகத்தில் துமிந்த சில்வா மற்றும் நாமல் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷவுடன் காமினி லொக்குகேவும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

நாமலுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி

கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 6 பேருக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Read More

நாமல் எம்.பி. கோரிக்கை

இலங்கை வரும் ஐக்­கிய நாடுகளின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆறு வரு­டங்­களில் வடக்கு கிழக்கு உட்­பட நாட­ள­ாவிய ரீதியில் மேற்­கொண்­டுள்ள அபி­வி­ருத்தி பணி­க­ளையும் கருத்தில் கொள்­ள ­வேண்டும் என்று அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ கோரிக்கை விடுத்­துள்ளார். ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்­வரும் 31ஆம் திகதி உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வருகை…

Read More

நீதிபதியின் அதிரடி உத்தரவு: நாமல் அதிர்ச்சி!

பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பலத்த எச்சரிக்கையின் மத்தியில் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தவறான முறையில் பெற்றுக் கொண்ட 45 மில்லியன் பணத்தை தனது இரண்டு நிறுவனத்தின் ஊடாக பணம் தூய்மையாக்கல் செய்த சம்பவம் தொடர்பில் நாமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நேற்றையதினம் கொழும்பு நீதிமன்றில் நாமலை ஆஜர்படுத்திய வேளை, பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு வழங்கியிருந்தார். இதன்போது நீதிமன்ற…

Read More

நாமல் ராஜபக்ஸவுக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால்சென்ற வாரம்  கைது செய்யப்பட்ட நிலையில் இன்று  22ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார். நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை ஆகி உள்ளார்.

Read More

நாமல் நீதிமன்றில் முன்னிலை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படஉள்ளார். நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த போதே நிதி மோசடி விசாரணை பிரிவினரால் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நாமல்…

Read More

நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு

நிதிச் சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் எம்-2 சிறைப் பகுதியில் நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்சவுடன் சுதர்சன கனோகொட என்ற மற்றுமொரு நபரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்சவின் நிறுவனத்தில் இந்த நபர் முகாமையாளராக கடமையாற்றியுள்ளார். நேற்று மாலை சிறையில் அடைக்கப்பட்ட நாமல் ராஜபக்சவை பார்வையிட அவரது தந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சென்றுள்ளார்….

Read More

நாமலுக்கு விளக்கமறியல்

இன்று (15) காலை நிதி மோசடி  விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளிக்க ஆஜரான நாமல் ராஜபக்ஷவை நிதி மோசடி  விசாரணைப்பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜபடுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நாமல்  நிதி மோசடி  விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாமலை உடனடியாக, கைதுசெய்ய நீதிபதி உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு இன்று -28- உத்தரவிட்டுள்ளார். கவர்ஸ் கோப்ரேஷன் நிறுவனத்தின் தலைவர் எனக் கூறப்படும் நாமல் ராஜபக்ச, ஹெலோ கோப் நிறுவனத்தின் 10 லட்சத்து 125 ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்துள்ளார். இந்த பங்குகளை கொள்வனவு செய்ய பணம் கிடைத்த விதம் சந்தேகத்திற்குரியது என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்…

Read More

பாதயாத்திரையை எவராலும் தடுக்க முடியாது ; நாமல்

அரசுக்கு எதிராக கொழும்பை நோக்கி முன்னெடுத்துள்ள எமது பாதயாத்திரையை எவராலும் தடுக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். பாரிய சவாலுக்கு மத்தியில் இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளோம். ஆனால் பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் அதனை உடைத்தெறிந்துள்ளோம். மக்களின் பலத்துடன் வீதிக்கு இறங்கியுள்ளோம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க மக்களின் ஆதரவை தேட இப்போது முயற்சிக்கின்றார். அரசாங்கம் நாட்டைப் பிளவுபடுத்தி சுயாதீன தன்மையை சர்வதேசத்திடம் ஒப்படைத்து நாட்டை…

Read More

நாமலின் வழக்கு ஒத்தி வைப்பு

நாமல் ராஜபக்‌ஷ எம்.பிக்கு எதிராக ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமால் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கை ஓகஸ்ட் 3ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது. ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது…

Read More