Headlines

நிறைவேற்று அதிகாரங்களை மைத்திரிபால குறைப்பார்: அமெரிக்கா நம்பிக்கை

இலங்கையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளை சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்வார் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப்பிரதிநிதி சமந்தா பவார் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அதிகாரக் குறைப்புக்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் பவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சோதனைகளில் இருந்து மீண்டு சமநிலையை பேண ஜனாதிபதி மைத்திரிபால விரும்புவதாகவும் பவர் தெரிவித்துள்ளார்.

Read More

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்குவது நல்லது

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்த தீர்மானம் சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று அனுராதபுரத்தில் தனது 70 ஆவது பிறந்த நாள் சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். பிறந்த நாளுக்கென்று மக்களுக்குத் தெரிவிக்க என்னிடம் எதுவும் கிடையாது. நான் எப்போதும் மக்கள் பக்கம் இருக்கின்றேன் எனவும் அவர் மேலும் கூறினார்.

Read More