அமைச்சர் றிஷாத் அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம்!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசுக்கு தொடர்ந்தும் நான் அழுத்தங்களை கொடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று நானாட்டான் கலாச்சார மண்டபத்தில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. இங்கு பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நானாட்டான் பிரதேச அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்…
