முஸ்லிம் பாடசாலைகளுக்கு 7, 8 ஆம் திகதிகளில் விடுமுறை
நோன்புப் பெருநாளையொட்டி, நாடளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 7 ஆம், 8 ஆம் திகதி களில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட்.தாஜூடீன் தெரிவித்தார். குறித்த இரு விடுமுறை தினங்களுக்குமான பதில் பாடசாலை ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடாத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சு கேட்டுள்ளது. இது குறித்து, கல்வியமைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் கல்விப் பணிப்பாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் பணிப்பாளர் தாஜூடீன் மேலும் தெரிவித்தார்….
