Headlines

முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகி உள்ளார். கடந்த அரசாங்கத்தில் அரச பொறியிலாலளர் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறையற்ற ரீதியில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் பதிவு செய்வதற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Read More

முஸாமிலுக்கு பிணை!

நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டிருந்த மொகமட் முஸாமிலைபிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மொகமட் முஸாமில் சற்று முன்னர் முன்னிலையானபோதே நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில்கடந்த மாதம் 20ஆம் திகதி முஸாமில் கைது செய்யப்பட்டார்.

Read More

முஸ்ஸமிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமிலுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

Read More

நாமல், முஸம்மில் ஒரே சிறை பிரிவில்

பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை (11) முற்பகல் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் ஈ பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதே ஈ பிரிவில், தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

Read More

மொஹமட் முஸம்மிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கடந்த மாதம் 20ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளருக்கு விளக்கமறியல்நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனத்தை முறைகேடாகபயன்படுத்தியமை தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பொறுத்திருந்து பாருங்கள் நடக்க உள்ளதை!

புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட மாட்டாது, அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டு எதிர்கட்சி இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை இன்று பார்வையிட சென்ற போதே செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய இருப்பதை தாம் மறுப்பதாகவும் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் புதிய கட்சி உருவாக்கப்பட மாட்டாது, மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ன நடக்க உள்ளது…

Read More

மெகசீன் சிறைச்சாலையில் மஹிந்த!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் பார்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச இன்று காலை மெகசீன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். போலி அட்டர்னி பத்திரம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு சொந்தமாக 11 கோடி ரூபா பெறுமதியான பங்குகளை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் உதய கம்மன்பில விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் மொஹமட் முஸம்மில்…

Read More

மொஹமட் முஸம்மிலுக்கு விளக்கமறியல்

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்று ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது.

Read More

மொஹமட் முஸம்மில் கைது

தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில், நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read More