புற்றுநோய்க்கு எதிராக, போராட விரும்புகிறீர்களா..?
இலங்கையின் மிகப்பெரும் அபாயமாக புற்றுநோய் விளங்குகிறது. பிரதான புற்றுநோய் சிகிச்சையளிப்பு வைத்தியசாலையாக மஹரகம விளங்குகிறது. இந்த வைத்தியசாலைக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கிற போதிலும் அது போதுமானதாக இல்லை. இந்த வைத்தியசாலைக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கதீஜா பௌண்டேசனும், அதன் நிறுவனர் மொஹமட் ஹாஜியும், அதன் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இலங்கையர்களிடையே 252 மில்லியன் ரூபாய் நிதி திரட்டியுள்ளனர். அந்த நிதியில் நவீன பெட் ஸ்கேன் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு இன்னும் பலபல…
