Headlines

23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவு!

பதவிக்காலம் முடிவடைந்த 23 உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் இன்று முதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி  தெரிவித்தார். மேலும்,உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மீண்டும் நடத்தப்படும் வரை அவற்றின் அதிகாரங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை மீண்டும் நீடிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளமையை குறிப்பிடத்தக்கது.

Read More