Headlines

பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினர் மேல் திணிக்க முடியாது

நாட்டில் உள்ள பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினர் மீது சுமத்தாமல் தேசிய அரசாங்கத்தின் மூலம் தீர்வு காண்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப நிலையத்தையும் ஐந்த மாடிகளைக் கொண்ட மாணவர் விடுதி கட்டடத் தொகுதியையும் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார். கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டி….

Read More

பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தப்படும் : லக்ஷ்மன்

இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்த்தை வழங்கி இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணும் விதத்திலான புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படும் என  தெரிவித்த அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே தேசிய அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். சப்ரகமுவ மாவட்டத்தில் நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டங்களை அண்மையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல…

Read More

மக்கள் குழப்பமடைய அவசியம் இல்லை!

நாட்டில் இன்னொரு ஆயுத போராட்டத்தை தடுக்கும் வகையிலும் இன ஐக்கியத்தை பலப்படுத்துவதற்குமான  தேவை உள்ளது. இதற்காக நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே புதிய அரசியல் அமைப்பே பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாகும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியமற்றது. நாம் அவ்வாறான எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் விரும்பாத எதையும் எம்மால் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது….

Read More

பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறை!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறையை (Online System) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். கல்வி துறையில் தற்போதைய நிலை மற்றும் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை நேற்று விவாதிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். இதில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பதிரன ஆகியோர் இணைந்துக் கொண்டுள்ளனர். இதன்போது, பகிடி…

Read More

இரண்டு வருடங்களுக்குள் 60 பல்கலைக்கழக விடுதிகள்!

இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விடுதிப் பற்றாக்குறை பிரச்சினை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் தீர்த்து வைக்கப்படும். இரண்டு வருடங்களுக்குள் 60 பல்கலைக்கழக விடுதிகள் அமைக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அழகியல்கலைப் பீடம் மற்றும் சுதேச வைத்தியத்துறை பீடங்களுக்கான இரண்டு புதிய விடுதிகள் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (25)  நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

இரத்தக் கறை படிந்தவர்கள் தேங்காய் உடைப்பது சாபக்கேடு

‘நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக இன்று சிலர், சிதறு தேங்காய் உடைக்கின்றனர். நேர்மையானவர்களே சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். மாறாக இரத்தக்கறை படிந்தவர்கள் தேங்காய்களை உடைப்பதால் எதுவும் நடந்துவிடுவதில்லை’ என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாவலப்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், ‘பல ஊடகவியலாளர்களின் கொலைக்கு காரணமானவர்கள், பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் பொன்சேகாவை சிறையில் தள்ளியவர்கள் தேங்காய்களை உடைப்பதால்…

Read More