Headlines

எலும்புக்கூடு முழுமையாகவுள்ளது

‘லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தினது எலும்புக்கூடு, முழுமையாக காணப்படுகின்றது. இதற்குக் காரணம், குறித்த சடலம், பொலித்தீன் உறையொன்றினால் முழுமையாகச் சுற்றிவைக்கப்பட்டிருந்தது. இதனாலேயே, சடலத்தைத் தோண்டி எடுக்கும்போது அதன் எலும்புக்கூடு முழுமையாக இருந்தது” என சடலம் தோண்டியெடுக்கப்பட்ட இடத்திலிருந்த அரச தரப்பு சட்டத்தரணி சீ.ரணகல தெரிவித்தார். சம்பவ தினத்தன்று, தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த லசந்த விக்கிரமதுங்கவை, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய டாக்டர் மொஹான் சில்வாவின் அறிக்கைக்கும் அவரது மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கைக்கும் இடையே, பரஸ்பர வேறுபாடு காணப்படுகின்றது….

Read More

லசந்தவின் சடலத்தை படம்பிடித்த ஆளில்லா கேமரா

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டப்படுவதை படம்பிடித்து சென்ற ஆளில்லா கேமராவால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணைக்காக அவரது சடலம் நீதிமன்ற உத்தரவிற்கமைய கடும் பாதுகாப்புடன் பொரளை பொதுமயானத்தில் தோண்டப்பட்டு வருகின்றது. குறித்த பகுதிக்குள் செல்ல ஊடகவியலாளர்கள் உட்பட ஒருவரும் இடமளிக்கப்படவில்லை. எனினும் குறித்த பகுதியில் நுளைந்த ஆளில்லா கேமாரா ஒன்று லசந்தவின் சடலம் தோண்டப்படுவதை படம்பிடித்து சென்றுள்ளது. இதனால் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை…

Read More

லசந்தவின் சடலம் வெளியே எடுக்கப்பட்டது

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் இன்று (27) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கல்கிஸ்சை நீதவான் மொஹமட் சஹாப்தீனால் கடந்த 8 ஆம் திகதி இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த முரண்பாடுகளை தணிக்கும் வகையில் பரிசோதனைகளை மீள மேற்கொள்வதற்கு…

Read More

லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்படுகிறது!

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் நாளை பொரளை கனத்தையில் இருந்து மீள தோண்டி எடுக்கப்படவுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கல்கிஸை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீனின் உத்தரவுக்கு அமைவாக சடலமானது நாளை இவ்வாறு தோண்டி எடுக்கப்படவுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் காலை 8.30  மணிக்கு இவ்வாறு சடலமானது தோண்டி எடுக்கப்படவுள்ள நிலையில் தற்போது பொரளை கனத்தையில் உள்ள…

Read More

ஜேர்மனிலிருந்து தருவிக்கப்பட்ட துப்பாக்கி மூலம் கொலை செய்யப்பட்ட லசந்த, தாஜுடீன்

சண்டே லீடர் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க எவ்வாறான முறையில் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்தம் வெளியிடாத துப்பாக்கி மூலம் கொலை செய்யப்பட்டாரா அல்லது ஸ்பிரிங் ஒன்றினால் வெளியாகும் தோட்டாவை கொண்ட சத்தம் வெளியிடப்படாத துப்பாக்கியால் சுடப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொலை தொடர்பில் காணப்பட்ட இருவேறு மருத்துவ கருத்து தொடர்பில் உண்மை தகவலை பெற்றுக் கொள்வதற்காக லசந்த விக்ரமதுங்கவின் சடலம் எதிர்வரும்…

Read More

லசந்தவின் சடலத்தை தோண்டியெடுப்பதற்கு, நீதிமன்றம் உத்தரவு

கொலைச் செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தை தோண்டியெடுப்பதற்கு கல்கிஸை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்கிஸை நீதவான் மொஹமட் சஹாப்தீன் இதற்கான அனுமதியை இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கியுள்ளார். இதற்கமைய, அவருடைய சடலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி தோண்டியெடுக்கபடவுள்ளது.

Read More

லசந்த கொலை: நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை!

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் நேற்று கல்கிஸ்ஸ நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் நபர் நீதிமன்றில் சாட்சியமளிக்கக்கூடிய மனோ நிலையில் இருக்கின்றாரா என பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அண்மையில் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது. இதேவேளை இந்த கொலை தொடர்பிலான சந்தேக நபர்களின்…

Read More

லசந்த வழக்கு ; இராணுவ புலனாய்வு அதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியை எதிர்வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று (03) கல்கிசை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் வாக்மூலம் பதிவு

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

லசந்த கொலை ; முன்னாள் பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் விசாரணை

பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர்  மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர்களான பிரசன்ன நாணயகார மற்றும் சந்திர வகிஷ்ட ஆகியோரிடம் இன்று (20) காலை குறித்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. லசந்த கொலை விசாரணைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில்…

Read More

மாயமான லசந்த விக்ரமதுங்கவின் குறிப்பு புத்தகம்!

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்த குறிப்புப் புத்தகம் காணாமல் போனமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொலை குறித்து விசாரணை நடத்திய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரகசிய தகவல்கள் அடங்கிய இந்த விசேட குறிப்புப் புத்தகத்தை காணாமல் போகச் செய்துள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்புப் புத்தகம் காணாமல் போன சம்பவம் குறித்து புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தம்மை கொலை செய்ய முயற்சிக்கும் நபர்கள் மற்றும்…

Read More

காணாமல் போன ஆவணங்களை கண்டறிய நீதிமன்றங்கள்!

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை இராணுவம் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை எனும் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வகையில் இராணுவத்தினால் இரண்டு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் தொடர்பிலும் இராணுவத்தின் வசமிருந்த ஆவணங்கள் தொலைந்துள்ளதாக கூறப்பட்டிருக்கும் அதேவளை, அதனை கண்டுபிடித்து குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், இலங்கை இராணுவ பொலிசாரை உள்ளடக்கிய சிறப்பு விசாரனைப்பிரிவுகளைக் கொண்ட விசாரணை நீதிமன்றதத்தினை இராணுவத் தளபதி அமைத்துள்ளதாக…

Read More