Headlines

தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்குள் சிக்க வேண்டாம்” – அமைச்சர் றிஷாத் 

இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க வேண்டாமென அமைச்சர் றிசாத் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்புப் பணிப்பாளரும், அமைச்சர் றிசாத் பதியுதீனின் குருநாகல் மாவட்ட பிரதம இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் தலைமையில் இடம்பெற்ற தேசிய நல்லிணக்கத்துக்கான ஹஜ் விளையாட்டுப் போட்டி மற்றும் சிறுவர்வர்தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அமைச்சர் றிசாத் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது; கடந்த 30 ஆண்டு காலமாக இந்நாட்டை…

Read More

அ.இ.ம.கா.வின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்  றிஷாத் பதியுதீன் அவர்களின்   குருநாகல் மாவட்ட இணைப்பாளரும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்புப் பணிப்பாளருமான அஸார்தீனின் ஏற்பாட்டில் குருநாகல் வெஹெர நகர விளையாட்டு மைதானத்தில், நேற்று காலை (02) இடம்பெற்ற நல்லிணக்கத்திற்கான ஹஜ்விளையாட்டுப்போட்டியில், அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்ஹ, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிரி தசநாயக்க, மக்கள்…

Read More

குருணாகலில் கோர விபத்து!

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கலேவெல என்ற பகுதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

விபத்தில் 20 பேர் படுகாயம்

குருநாகலிலிருந்து பத்தரமுல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸும் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸும், குருநாகல் – கொழும்பு பிரதான வீதியில் துல்ஹிரியவில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர். இன்று  காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தோர், வறகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல், பாதுகாப்பு வழங்க கோரிக்கை

குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று -10- மாலை உரையாற்றவுள்ள நிலையில், இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால்  இதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்திய போதிலும் மார்க்க சொற்பொழிவை காரணம் காட்டி அதை பொலிஸார் நிராகரித்துள்ளனர். ஆகவே, மும்மன்ன கிராமத்துக்கு இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பை பெற்றுத் தருமாறு மும்மன்ன மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்த…

Read More

குருநாகல் வைத்தியசாலையில் தீ விபத்து

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை தீவிபத்து சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தத் தீப்பரவல் சம்பவம்இடம்பெற்றதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்தது தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத்தீயினால் பல வார்டுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநோயாளர் பிரிவு எரிந்துள்ளதால் நோயாளிகளுக்கு தேவையானசிகிச்சைகளை வழங்குவதற்கு வேறொரு இடத்தை தெரிவு செய்துள்ளதாகவும் குருநாகல்வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சந்தன கந்தன்கம…

Read More

கருங்கல் வெடிப்பு: 30 குடும்பங்கள் இடம்பெயர்வு

குருநாகல், வெவகெதரப் மலையிலுள்ள பாரிய கருங்கல் வெடித்ததால் அப்பதியிலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதகாரிகள் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை (23) இரவு, பெரிய சத்தம் கேட்டதையடுத்து பிரதேச வாசிகள் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அறிவித்திருந்தனர். அதன் பின்னரே, அப்பதியிலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்தவர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Read More

வாக்குவாதம் செய்த தயாசிறி – வெல்கம

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ.சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் கடுமையாக வாக்குவாதப்பட்டுக் கொண்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. விமல் வீரன்ச, தினஸ் குணவர்தன உள்ளிட்டவர்கள் அண்மையில் குருணாகல் மாவட்ட சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற அரசியல்வாதிகளை சந்தித்து தனித்து போட்டியிடுவது குறித்து பேசியுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்….

Read More