Headlines

பள்ளி சென்ற மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில்!

காலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மூவர் கஞ்சா பயன்படுத்திய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு வெளியே கஞ்சா பயன்படுத்திய நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த மாணவர்கள் மூவரும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து இந்த பாடசாலைக்கு வந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

ஏறாவூரில் கஞ்சாவுடன் நடமாடிய ஒருவர் கைது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய ஒருவரை நேற்று (22) வெள்ளிக்கிழமை இரவு தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த 21 வயதுடைய நபர் ஏறாவூர் பழைய சந்தை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5000mg (மில்லிகிராம்) கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை…

Read More