Headlines

ஒழுக்கத்தை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை

பாராளுமன்றத்தில் ஒழுக்கங்களை மீறி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்ற விவாதங்களின் போது உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து பொதுமக்கள் விமர்சனங்களை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தகுந்த வார்த்தை பிரயோகங்களை உபயோகப்படுத்தி பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்குமாறும் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அத்துடன் பாராளுமன்ற ஒழுக்கங்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளமை…

Read More

நாடாளுமன்றில் இன்று விவாதம்!

நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது. உத்தேச நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் செய்யப்படவுள்ளது. 2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய இந்த திருத்தங்களை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, வற் வரி அதிகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலான தீர்ப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பற்றி சபாநாயகர் இன்று (9) நாடாளுமன்றில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

சபாநாயகர் பங்களாதேஷ் சென்றார்

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய பங்களாதேஷிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். டாக்காவில் இடம்பெற உள்ள மத நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்வதாக அவரின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. சபாநாயகரின் இந்த விஜயத்தின் போது, பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீத், பங்களாதேஷ் எதிர்கட்சி தலைவி பேகம் இர்ஷாட், அந்நாட்டின் பிரதி சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

Read More

குறைநிரப்புப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பு மீளவும் நடைபெறும்!

குறைநிரப்புப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பு மீளவும் நடைபெறTள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

Read More

கரு ஜயசூரிய அனுதாபம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மற்றம் நிர்க்கதியாகியுள்ள அனைவருக்கும், நாடாளுமன்றம் சார்பாக அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இந்த அனர்த்த விடயத்தில் முழு நாடாளுமன்றமும் அவதானம் செலுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (18) புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்டவாறு அறிவித்தார். நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய அசாதாரண வானிலையினால்…

Read More

நாடாளுமன்ற அறிக்கை கசிவு!

நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (4) இடம்பெற்ற வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஊடகங்களுக்கு முன்கூட்டியே வெளியிட்டப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய இதனை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற சபையில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்னர் அதில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகள் ஊடகங்களின் மூலம் வெளியிடப்பட்டன. இந்தநிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விடுத்தவேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், தாம் அந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.

Read More

பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் கண்டனம்!

பாராளுமன்றத்தில் நேற்று(03) நடைபெற்ற நடவடிக்கைகளானது பாராளுமன்றத்தின் உயரிய தன்மைக்கும் அபிமானத்துக்கும் பெரும் களங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவர்களையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக சாபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று சபையில் அறிவித்தார். பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்…

Read More

சபாநாயகர் பாக்கிஸ்தான் பயணம்

சபாநாயகர் கரு ஜயசூரிய பௌத்த பிக்குகள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்றுடன் பாக்கிஸ்தானுக்கு ஒருவார சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்தக் குழுவில் முக்கிய விகாரைகளின் அதிபதிகள் மற்றும் பௌத்த புத்திஜீவிகளை கொண்ட 40 பேர் உள்ளடங்கியுள்ளனர். கோட்டே ஸ்ரீகல்யாணி தர்ம சபையின் பிரதம சங்க நாயக்கர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதான சங்கநாயக்கர் திருகோணமலை ஆனந்த தேரர், அஸ்கிரி பீடத்தின் பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர், மல்வத்து பீடத்தின்…

Read More

சபாநாயகர் சாம்பியா பயணம்

அனைத்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய சாம்பியா நாட்டை நோக்கி பயணமாகியுள்ளார். சாம்பியாவின் லுலகா நகரில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடரானது 167வது கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க 167 நாடுகளைச் சேர்ந்த சபாநாயகர்கள் உட்பட 2000 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையிலிருந்து சபாநாயகர் கருஜயசூரியவுடன் இராஜங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க,பிரதி அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,கே.கோடீஸ்வரன், பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க…

Read More

உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகருக்கு இரண்டு விருதுகள்!

உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. எதிர்வரும் 13ம் திகதி இந்தியாவின் கொல்கொட்டா சைனா பார்க் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. 1995ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குற்றங்களை தடுத்தல், இன சகோதரத்துவத்தை ஏற்படுத்தல், சமூக அபிவிருத்தி, மனிதநேய செயற்பாடுகள், சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தல், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை அதிகரித்தல், தன்னார்வ சமூக சேவைகளில் ஈடுபடுதல் போன்ற…

Read More

பாராளுமன்றத்தில் அதிக வலிகளை சந்திக்கிறேன் – சபாநாயகர்

இரத்தம் எடுக்கும்போது ஏற்படும் வலியை விட பாராளுமன்றத்தில் அதிக வலிகளை சந்திப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாம் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் நிலையில் சபாநாயகரான கரு ஜயசூரியவும் இதன்போது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதன்போது சபாநாயகரின் இரத்தமாதிரி பரிசோதனைக்காக அவரிடம் இரத்தம் எடுக்கும் போது “சற்று வலி இருக்கும்” என தாதி ஒருவர் சபாநாயகரிடம் கூறியுள்ளார். எனக்கு இந்த வலி பெரிதாக தோன்றவில்லை காரணம் இதை விட அதிக வலிகளை…

Read More

சர்வாதிகாரி போன்று செயற்படத் தயாரில்லை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்கும் பாவச்செயலில் பங்குகொள்ளமுடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (09) நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியான குழுவாக செயற்பட அனுமதி கோரி நிற்கின்றனர்.எனினும், இந்த விடயம் குறித்து தனித்து தீர்மானிக்க முடியாது எனவும், சர்வாதிகாரியைப் போன்று செயற்படத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்குள் குழுக்கள் இருக்க முடியும் என்ற போதிலும் குழுக்களுக்குள் கட்சிகள் இருக்க முடியாது என…

Read More