Headlines

மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை திறக்க ஏற்பாடு

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை அவுஸ்திரேலிய – இலங்கை தொடரின் போது திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த உள்ளக கிரிக்கெட் மையத்தின் கட்டுமான வேலைகளை, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, ஐ.சி.சி.யின் பிரதம நிறைவேற்றதிகாரி டேவிட் ரிச்சட்சன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் விஜயம் செய்து பார்வையிட்டனர். குறித்த உள்ளக கிரிக்கெட்…

Read More

கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு தையல் பயிற்சி நிலையங்கள் அமைப்பதற்கு அமைச்சர் றிஷாத் முடிவு

கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு  தையல் பயிற்சி நிலையங்களை அமைத்துத் தருவதற்கு அமைச்சர் றிசாத் முன் வந்துள்ளதாக மடவளை வை.எம்.எம்.ஏ. தலைவர் ஏ.எம்.சலாஹுதீன் தெரிவித்தார். அக்குரணை, கெலியோயா, கண்டி, கம்பளை ஆகிய இடங்களில் இந்த தையல் பயிற்சி நிலையங்களை அமைத்துத் தருவதாக அமைச்சர் தெரிவித்ததாக வை.எம்.எம்.ஏ. தலைவர் மேலும் குறிப்பிட்டார். மடவளை மதீனா கல்லூரி அஷ்ரப் கேட்போர் கூடத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்ட அமைச்சர், மடவளைக்கு தையல் பயிர்ச்சி நிலையம் ஒன்றை…

Read More

கண்டி – அம்பலமான தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாயம்

கண்டி, கலஹா பிரதேசத்தில் அம்பலமான பெருந்தோட்டப் பகுதியில் திரிவானா கற்பாறையுள்ள பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கண்டி  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read More

கண்டியில் ஆசிரியர்களுக்கு செயலமர்வு

கல்வி அமைச்சின் அனுசரணையில் கண்டி குருதெனியவில் ஆசிரியர்களுக்கான வதிவிட செயலமர்வு ஒன்று நடத்தப்படுகிறது. நாளையும் நாளை மறுதினமும் இந்த செயலமர்வு குருதெனியவில் உள்ள கல்வி அபிவிருத்தி நிலையத்தில் நடத்தப்படவுள்ளது. இதில், நுவரெலிய, கம்பளை, கொத்மலை மற்றும் ஹட்டன் வலயத்தின் தெரிவு செய்யப்பட்ட 40 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர். தோழில் வழிகாட்டல் என்ற தொனிப்பொருளில் இந்த செயலமர்வு இடம்பெறுவதாக குருதெனிய வள நிலைய உதவி முகாமையாளர் எம் தங்கராஜ் அறிவித்துள்ளார்.

Read More

காற்று மாசடைதலில் கண்டி முதலிடம் – ஜனாதிபதி

கொழும்பு நகரத்தை தோல்வியடைய செய்து காற்று மாசடைதலில் கண்டி நகரம்  முதலிடத்துக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். இலங்கையின் காற்று மாசடைதல் தொடர்பிலான ஆறாவது தேசிய மாநாடு நேற்று  (5) மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. பத்தரமுல்லையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

Read More

பேராதனை – கண்டிக்கிடையில் ரயில் பஸ் சேவை ஆரம்பம்

பேராதனை மற்றும் கண்டி நகருக்கு இடையில் ரயில் பஸ் சேவையை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. கண்டி நகரில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

Read More

கண்டி உடதலவின்னவில் முஸ்லிம் கடைக்கு தீ வைப்பு

கண்டி உடதலவின்னவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைக்கும் வீதியில் நிறுத்தப்பட்டிருநத வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று வியாழன்(28) இடம்பெற்றுள்ளது கண்டி உடதலவின்னை புகையிரத நிலைய பாதையை அண்மித்த வீதியிலேயே இச்சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடை அறையை பெரும்பான்மையின சகோதரர் அண்மையில் வாடகைக்கு எடுத்திருந்தார். அந்தக் கடைக்கே தீ மூட்டப்பட்டுள்ளது. இக்கடை அறை முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வாகனங்களும் எரிந்துள்ளன. அத்துடன் அந்த வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் லொறிக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் உடதலவின்னை பொலிசார்…

Read More

தவறை உணர்ந்த மஹிந்த!

தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே, தனது மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டியில் வைத்து நேற்று முன்தினம் (31) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘பணச் சலவை சட்டத்தின் கீழேயே யோஷிதவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் பணம், இலங்கையில் முதலிடுவதற்கு தடை விதிக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் 7 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன….

Read More

கண்டி பஸ் வீடொன்றின் மேல் விழுந்து 22 பேர் காயம்

– றிஸ்மி கலகெதர – கண்டியில் இருந்து வட்டபுலுவ நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி வட்டபுலுவ “யக்கா வங்குவ” எனும் திருப்பத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயனித்த 22 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு ஏழு மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. “யக்கா வங்குவ” திருப்பத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து வீடொன்றின் மேல் விழுந்தது. வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அதேவேளை, பஸ்ஸில் பயனித்த 22 பேர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Read More