Headlines

களுத்துறை அரபுக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு விழா

– களுத்துறை  செய்தியாளர் – மக்கா, ஹரத்தில் மறைந்த மர்ஹூம் சவூதி மன்னர் அப்துல் அஸீஸ் ஞாபகார்த்தமாக நடைபெற்ற 66 நாடுகளிலிருந்து 224 மாணவர்கள் பங்கு கொண்ட உலகளாவிய ரீதியில் நடைபெற்ற கிராத் போட்டியில் 4ஆம் இடத்தைப் பெற்ற களுத்துறை ஹில்ரியா அரபுக் கல்லூரியின் 17 வயது மாணவர் அல்-ஹாபிழ் முஹம்மத் நஸ்லின் நவாஸ் இற்கு கடந்த 20/11 அன்று களுத்துறை ஹிலிர் ஜும்மா பள்ளிவாயலில் ஜும்மா தொழுகையின் பின் பாராட்டு விழா இடம்பெற்றது. மக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கையிலிருந்து 3 பேர் தெரிவு…

Read More

புளத்சிங்கள தொகுதியின் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் கைது

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகுதியொன்றின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் இன்று காலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புளத்சிங்கள தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் துசித குலரத்ன என்பவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். இவரது மனைவிக்கு போக்குவரத்துப் பொலிசார் அபராதம் விதித்து, தண்டப்பணம் அறவிடுவதற்கான பத்திரமொன்றை வழங்கியிருந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் துசித குலரத்ன பொலிசாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது….

Read More