இஸ்லாத்தை அவமதிக்கும் செயற்பாடு: ஏ.எச் .எம். அஸ்வர் கடும் அதிருப்தி
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில் மன்னார் கல்வி வலயத்தினால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தரம் 2 மற்றும் 3 க்கான இஸ்லாம் பாட பரீட்சைக்குரிய வினாத்தாள்களில் பாரதூரமான எழுத்துப் பிழைகள் இடம்பெற்றிருந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச் .எம். அஸ்வர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறித்த வினாத்தாளில் ‘நபி’க்கு ‘நரி’ என்றும் ‘தாய்’க்கு ‘நாய்’ என்றும் அச்சு பிழைகள் ஏற்பட்டிருந்ததாகவும் இது இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள…
