Headlines

கோத்தபாயவிடம் இன்று விசாரணை

அவன்ட் கார்ட் மற்றும் ரக்ன லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ இன்று (வியாழக்கிழமை) பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆயுத கொடுக்கல் வாங்கல் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கோத்தபாய உள்ளிட்ட ஐவரை குற்றவாளிகளாக நிரூபிக்க முடியுமென அண்மையில் பிரதி சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த மோசடிகள் தொடர்பில் பொதுமக்களிடமும் சாட்சியங்கள்…

Read More

கோத்தபாய பாரிய நிதி மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவில் பிரசன்னம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார். சற்று முன்னர் அவர் இவ்வாறு ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More