Headlines

இலங்கையை அச்சுறுத்தும் அடையாளப்படுத்தப்படாத நோய்!

இந்தியா சென்று இலங்கை திரும்பிய பின்னர் காய்ச்சல் மற்றும் சுவாசம் தொடர்பான நோய் நிலைமை ஏற்பட்டால், உடனடியாக அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு, மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்று நாடு திரும்பிய இரு தாய்மார் உயிரிழந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக சிலாபம் வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இவ்வாறான நோய் காரணமாக பாதிக்கப்பட்ட சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது….

Read More

மலேரியா அற்ற நாடாக இலங்கை பிரகடனம்

இலங்கையை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளது கொழும்பில் இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் வருடாந்த மாநாட்டில் இதற்கான சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனத்தின்  பணிப்பாளர் நாயகம் மார்க்ரெட் சென் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் நேற்று கையளித்தார்.

Read More

மோசடிகளை தடுத்தால் நிதி சேகரிக்க முடியும்

சுகாதார துறைக்குள் இடம்பெறும் மோசடிகளை இந்த வருடத்திற்குள் தடுத்தால் 2000 மில்லியனுக்கு அதிகமான நிதியினை சேமிக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்து கொள்வனவு போன்ற விடயங்களில் அதிகமான பங்கு பணங்கள் கைமாறப்படுவதாகவும், குறித்த பங்குப் பணங்கள் அரச அதிகாரிகளுக்கு கிடைப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் புற்றுநோயாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக இரண்டு இலட்சத்துக்கு அதிகம் பெறுமதியான மருந்துகள் கிடைத்துள்ளதாகவும், மேலதிகமான மருந்துகளுக்காக ரஸ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மருந்தினை கொள்வனவு செய்வதன் பொருட்டு நிதி சேகரிப்பதின்…

Read More

சிறுவர் நல விசேட மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்சபைக்கூட்டம்

இலங்கை சிறுவர்நல விசேட மருத்துவர்கள் சங்கத்தின் 19 ஆவது வருட பொதுக்கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முந்தினம்(11) பிற்பகல் காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. சிறுவர் நோய்களைக் கண்டறிவதற்கும் அந்நோய்களைக் குணப்படுத்துவதற்காகவும் முக்கிய பங்களிப்புகளை வழங்கிய வைத்தியர்களை கௌரவிக்கும் வகையில் பேராசிரியர் ஆசிரி குணவர்த்தனவுக்கும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வைத்தியர் அமித் குப்தாவுக்கும் வைத்தியர் ஸ்ரீனிகா குலரத்னவுக்கும் ஜனாதிபதியினால் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கை…

Read More

சீனியை தொடர்ந்து உப்பு

சந்தையில் விற்பனைக்குள்ள உணவுப் பொருட்களின் சீனி மற்றும் உப்பின் அளவை குறித்துக் காட்டக்கூடிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தெரிவித்தார். இதேவேளை, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைக் குறித்து காட்டாதவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

வருடாந்தம் 2500 புற்றுநோயாளிகள்

வருடாந்தம் 2500 புற்றுநோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், தினமும் ஆறு வாய் புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் ஆயிரத்து 888 ஆண்களும், 534 பெண்களும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆண்களில் பெரும்பாலானோர் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெற்றிலை, புகையிலை, புகைத்தல் மற்றும் மதுபானம் போன்ற காரணங்களினால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. வாய் புற்றுநோய் தொடர்பான நோய் குணங்குறிகளை அறிந்துகொள்ள தேவையான வசதிகளை சிகிச்சை…

Read More