‘ஆசிரியையின் வாயை மூடியது தவறு’: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
“பாடசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து, கல்வி அமைச்சு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட கொழும்பு, மஹாநாம வித்தியாலயத்தின் ஆசிரியையின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக, கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்றுப் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அத்துடன், குறித்த ஆசிரியைக்கு நட்டஈடு வழங்குமாறும், பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை அரசியல் அமைப்பில் 12.1 உறுப்புரை மற்றும் 14.1 உறுப்புரையில் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 12….
